உலகின் சிறந்த 10 தத்துவ ஞானிகள் என்ன சொல்கிறார்கள்

உலகின் சிறந்த 10 தத்துவ ஞானிகள் என்ன சொல்கிறார்கள்..?

உலகின் சிறந்த 10 தத்துவ ஞானிகள் சொன்ன புகழ்பெற்ற தத்துவங்கள் இங்கே...
சாக்ரடீஸ்
உலகத்தின் முதல் தத்துவஞானி என போற்றப்படுபவர் சாக்ரடீஸ். மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர். உலகில் எந்த மதமும் தோன்றாத காலக்கட்டத்திலேயே மனித அறிவின் தோற்றம், தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கியவர்.
''எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்கு தெரியும், ஏனெனில் நான் ஒரு அறிவாளி'' என்பது சாக்ரடீஸின் புகழ்பெற்ற தத்துவம்.
பிளாட்டோ
க்ரீஸில் கி.மு 348-ம் ஆண்டுகளில் வாழ்ந்த தத்துவஞானி. பிளாட்டோவின் தத்துவங்கள்தான் 2400 ஆண்டுகளாக உலகத்தை ஆண்டு வருகிறது. சாக்ரடீஸின் மாணவரான பிளாட்டோ மேற்கத்திய அறிவியல், வாழ்வு மற்றும் கணித தத்துவத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர். கண்மூடித்தனமான மத நம்பிக்கைகளை உடைத்ததில் ப்ளாட்டோவின் தத்துவங்களுக்கு பெரும் பங்கு உண்டு.
'உள்ளடக்கத்துடன் வாழ்வதே மிகப்பெரிய செல்வம். நல்லவர்களுக்கு சட்டங்கள் தேவையில்லை, ஏனெனில் அவர்கள் பொறுப்புடன் வாழ்வார்கள். கெட்டவர்கள் தங்களுகே உரிய சட்டத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள்'' என்பது பிளாட்டோவின் புகழ் பெற்ற தத்துவம்.
அரிஸ்டாட்டில்
மனிதன், இறைவன், அரசியல், மூன்று பிரிவுகளையும் அலசி ஆராய்ந்து தமது தத்துவ தரிசனமாக உலக்கு வங்கியவர் அரிஸ்டாட்டில். இவர் பிளாட்டோவின் மாணவர். மாவீரனாகத் திகழ்ந்த அலெக்சாண்டருக்கு பன்னிரண்டு ஆண்டுகள் நண்பராகவும், ஆசிரியராகவும் இருந்தவர் அரிஸ்டாட்டில்.
“இந்த உலகம் இறைவனால் தோற்றுவிக்கப்படவில்லை. ஆனால் இந்த உலகை இயக்குபவன் இறைவனே!” “மனிதன் தனிமனிதச் சிந்தனை கொள்ளாமல், சமூகச்சிந்தனையோடு வாழ வேண்டும்'' என்கிறார் அரிஸ்டாட்டில்
கார்ல் மார்க்ஸ்
பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் முக்கியமானவர் கார்ல் மார்க்ஸ். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில், வரலாற்றை ஆராய்ந்து சொன்ன இவரது தத்துவங்கள், சமூக பொருளாதார அரசியல் அரங்கில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது.
''மூலதனம் இறந்த தொழிலாளரை போன்றது. இது உயிருள்ள தொழிலாளரின் உழைப்பை உறிஞ்சும் வாழ்கிறது'' என்பது மார்க்ஸ்சின் கருத்து.
டார்வின்
'மனிதன் எப்படித் தோன்றியிருப்பான்?' என்ற பன்னெடுங்காலமாக தொங்கி நின்ற கேள்விக்கு தெளிவான விடையை சொன்னவர். மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியை பல நூற்றாண்டுக்கு முன்பே தெளிவுபடுத்திய வகையில், பல ஆராய்ச்சிக்கான கதவுகளை அகல திறந்து வைத்த பெருமைக்குரியவர்.
''மனிதன் ஒரு மணி நேரத்தை வீணாக்கிறான் என்றால், அவன் வாழ்கையில் மதிப்பை உணரவில்லை என்று அர்த்தம்'' என்கிறார் டார்வின்
விவேகானந்தர்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவராக திகழ்ந்தவர் விவேகானந்தர். இவரின் கருத்துக்கள் இளைஞர்களிடையே மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.
'' நீங்கள் யாருக்கும் உதவி செய்ய முடியாது. சேவை மட்டுமே செய்ய முடியும்'' என்பது விவேகானந்தரின் புகழ் பெற்ற கருத்து.
வள்ளலார்
வள்ளலார் என்ற இராமலிங்க அடிகளார் ஓர் சிறந்த தத்துவ ஞானி. சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக ஆன்மீகவாதிகளாலே விமர்சனத்திற்கு உள்ளானவர். ''அறியாமை என்னும் மாயத்திரைகள் நம்மை விட்டு விலகினால் அருட்பெருஞ்சோதியான ஆண்டவரை நாம் தரிசிக்கலாம்'' என்பது வள்ளலாரின் வாதம்.
ஓஷோ
சிறு வயதிலிருந்தே தியானத்தில் ஈடுபட்ட ஓஷோ, தன்னுடைய இருபத்தொன்றாவது வயதில் ஞானம் அடைந்தார். ஞானமடைதல் என்பது, முழுமையான தன்னுணர்வு அல்லது விழிப்பு உணர்வு நிலை என்பதை குறிப்பதாகும். கெளதமபுத்தர், கபீர், ரமணர் மற்றும் பலர் இப்படி ஞானம் அடைந்தவர்கள்தான்.
''கடவுள் உன்னிடமிருந்து தன்னை எப்போதும் மறைத்துக் கொள்வதில்லை.நீ தான் உன்னுடைய கோப தாபங்களால் அவரைக் காணமுடியாதபடி கண்களை மூடி வைத்துக் கொள்கிறாய்'' என்கிறார் ஓஷோ.
புத்தர்
தத்துவ ஞானி கௌதம புத்தரை அடிப்படையாகக்கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. கௌதமருடைய வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும் புத்த மதம் ஏற்றுக்கொண்டுள்ளது.
''பிராத்தணைகளை விட மிக உயர்ந்தது பொறுமை தான்'' என்பது புத்தரின் புகழ்பெற்ற பொன்மொழி.
மகாவீரர்
சமண சமயத்தின் மையக் கருத்துக்களை நிறுவிய துறவி. மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் ‘நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்’ என்ற போதனையை போதித்தவர்.அவருடைய போதனைகளும், தத்துவங்களும் இன்றும் உலகம் முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு போற்றப்படுகிறது.
''கவனமுடன் செயலாற்றுங்கள்..நல்ல விஷயங்களில் மட்டும் மனதை திருப்புங்கள்.'' என்பது மகாவீரரின் அறிவுரை.