உங்க சம்பளத்தில் எதற்கு வரி உண்டு - எதற்கு வரி இல்லை

உங்க சம்பளத்தில் எதற்கு வரி உண்டு - எதற்கு வரி இல்லை
Knowledge  What Is Taxed And What is Not From Your Total Salary      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


மாதச் சம்பளதாரராக, நீங்கள் சம்பாதிக்கும் மொத்த தொகையை (CTC- Cost To Company) தெரிந்த வைத்திருப்பீர்கள். ஆனால் வருமான வரித்துறை மொத்த ஊதியத்திலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் வருமானத்தைக் கணக்கில் கொண்டு மொத்த வரி விதிப்பிற்குட்பட்ட வருவாயைக் கணக்கிட்டு, குறிப்பிட்ட நிதியாண்டில் நீங்கள் செலுத்த வேண்டிய வரியை நிர்ணயிக்கும்.

ஆனால் சிடிசி என்பது பெரிய மதிப்பாக இருப்பதால், அதன் கீழ் வரும் எந்தெந்த பிரிவுகள் வருமானவரிக்கு உட்பட்டவை என இங்கே காணலாம்

சிடிசி என்றால் என்ன..?
சிடிசி (CTC-Cost To Company) என்பது, நிறுவனம் தனது பணியாளருக்குச் செய்யும் நேரடி செலவினம் ஆகும். அடிப்படை சம்பளம், வீட்டுவாடகைப் படி,சிறப்பு ஊதியம், போனஸ், தொழிலாளர் வைப்புநிதியின் பணியாளர் பங்கு, பணிக்கொடை, பயணப்படி, மருத்துவச் செலவுகள், உணவு கூப்பன்கள் போன்றவை சிடிசி-ல் அடங்கும்.

உங்கள் மொத்த சம்பளத்தில் எந்தெந்த பிரிவிற்கு வரிவிலக்கு உண்டு, எவற்றிற்கு வரிப் பிடித்தம் செய்யப்படும் என்பதை இங்கே காணலாம்.

வரிவிலக்குப் பெற்ற பிரிவுகள்
1. தொழிலாளர் வைப்புநிதியின் பணியாளர் பங்கு
2. பணிக்கொடையின் பணியாளர் பங்கு
3. வீட்டுவாடகைப் படி
4. உணவு கூப்பன் (ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ26,400)

வருமானவரி தாக்கலின் போதும், வரியினங்களைக் கணக்கிடும் போதும் உங்கள் சம்பளத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தில், வரிபிடித்தம் செய்யக்கூடிய இனங்கள் பின்வருமாறு.

1. அடிப்படை சம்பளம்
இதன் 100% ம் வரிக்கு உட்பட்டவை மற்றும் இது மொத்த சம்பளத்தில் 30-50% வரை இருக்கும். சம்பளத்தின் மற்ற அனைத்து இனங்களும் அடிப்படை சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.

2. வீட்டு வாடகைப்படி
பணிபுரியும் இடத்தைப் பொறுத்து, நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் உறைவிடத்திற்கு ஏற்படும் செலவை வீட்டு வாடகைப்படி என வழங்குகின்றன. பின்வரும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வரிவிலக்கு அளிக்கப்படும்.

i) சம்பள சான்றிதழில் குறிப்பிட்டுள்ள தொகை வரை
ii) அடிப்படை சம்பளத்தின் 40%
iii)10% அடிப்படை சம்பளத்திற்குக் குறைவாக உள்ள உண்மையான வாடகை

3. போனஸ் மற்றும் சிறப்பு ஊதியங்கள்
பணியாளர்களின் செயல்திறனை ஊக்குவிக்க வழங்கப்படும் சம்பள இனமான இது 100% வரிகளுக்கு உட்பட்டது.

4. விடுமுறை பயண ஊதியம் (Leave Travel allowance)
4 ஆண்டுகளில் 2 முறை இந்தச் சம்பள இனத்திற்கு வரிவிலக்குக் கோரலாம். பயணத்தில் ஏற்படும் செலவுகளுக்கு உரிய ஆதாரங்கள்/ஆவணங்கள் சமர்ப்பித்தால் மட்டுமே வரிவிலக்கு கோர முடியும்.