சிங்கிரிகுடி ஸ்ரீ நரசிம்மரே போற்றி போற்றி

சிங்கிரிகுடி ஸ்ரீ நரசிம்மரே போற்றி போற்றி               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

சிங்கிரிகுடி ஸ்ரீ நரசிம்மருக்கு உகந்த இந்த போற்றியை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் வாழ்வின் உண்டாகும் துன்பங்கள் பறந்தோடும் என்று நம்பிக்கை.

சிங்கிரிகுடி யமர்ந்த ஸ்ரீ நரசிம்மரே போற்றி
லட்சுமியை மார்பேந்திய ஸ்ரீ நரசிம்மரே போற்றி
பதினாறு கரமுடன் இரண்யனை வதைத்தவரே போற்றி
பிரகலாதன் பக்திக்கு மெச்சி காட்சி தந்தவரே போற்றி
கனகதாரா ஆண்டாளுடன் அருள் தரும் சிங்கமுகரே போற்றி
மணவாள மாமுனிகள் போற்றிய மாவீரரே போற்றி
சுக்கிரன் பார்வைபெற துதித்திட்ட சுதர்சனரே போற்றி
வசிஷ்டர் வணங்கிய சிங்கமுகப் பெருமானே போற்றி
கஷ்டம் கடன் கவலை தீர்ப்பவரே போற்றி
சத்ருக்கள் சம்ஹார மூர்த்தியே நரசிம்மரே போற்றி
யோக நரசிம்மா பாலநரசிம்மருடன்
அருள்கின்ற அருளாரே போற்றி
கருடாழ்வார் துதிக்கின்ற கருணாமூர்த்தியே போற்றி
ஆஞ்சநேயர் வழிபட்ட அவதாரப் புருஷரே போற்றி
வேதசொரூபமான சிவனார் போற்றிய சிம்ம ரூபியே போற்றி
சொல்லரிய பலம் கொண்டசங்கு சக்கர தாரியே போற்றி
தசாவதார புருஷனே தர்ம தயாளனே போற்றி
தூணிலும் துரும்பிலும் காட்சி தரும் துளசிமார்பனே போற்றி
நாமணக்க நாராயணா என்பவருக்கு நலமருள்பவரே போற்றி
பூமணக்க புகழ்மணக்க அருள்கின்ற நரசிம்மரே போற்றி
நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் தருபவரே போற்றி
மலர்மங்கை மார்பனே, மாயவனே, தூயவனே போற்றி
மண்ணுயிரைக் காக்கவந்த மதுசூதனே மாதவனே போற்றி
புன்னகையோடு பூவுலகாளும் பேரருளாளனே போற்றி
தேவர்குலம்வாழ, அசுரர்குலம்வீழ, தேவர் பக்கம்
நின்ற திருமாலே போற்றி
சிங்கிரி கோவிலமர்ந்த ஸ்ரீ நரசிம்மரே போற்றி போற்றி