நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் சேனைக்கிழங்கு கடைசல்

சேனைக்கிழங்கு கடைசல் - நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்
நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் சேனைக்கிழங்கு கடைசல்


சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

தேவையான பொருட்கள்

சேனைக்கிழங்கு - கால் கிலோ
புளி - சிறிய எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி அல்லது குழம்பு மசாலா - ஒன்னரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
மல்லி கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு.
நறுக்கிய வெங்காயம் – 1 கப்

செய்முறை:

முதலில் சேனைக்கிழங்கை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி கழுவி எடுக்கவும். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும். குக்கரில் சேனைக்கிழங்கு,அரிசி கழனி ஒரு கப், சிறிது உப்பு சேர்த்து மூன்று விசில் வேகவைத்து எடுத்த பின்பு தண்ணீர் வடிகட்டி மசித்து விடவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,வற்றல்,கருவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். அத்துடன் புளித்தண்ணீர் சேர்க்கவும்.மஞ்சள் தூள்,சாம்பார் அல்லது குழம்பு மசாலா பொடி சேர்க்கவும். நன்கு கொதித்ததும் மசித்த சேனைக்கிழங்கை சேர்த்து கலந்து விடவும்.அடுப்பை சிறிதாக வைத்து நன்றாக ஒரு சேர கொதித்ததும் நறுக்கிய மல்லி இலை சேர்த்து இறக்கவும்.