மேல்மலையனூர் அங்காளம்மனின் உருவ விளக்கம்

மேல்மலையனூர் அங்காளம்மனின் உருவ விளக்கம்
melmalayanur-angalamman-worship


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


மேல்மலையனூர் அங்காளம்மனின் முகம், யார் என்ன நினைத்துக் கொண்டு அம்மனை பார்க்கிறார்களோ அந்த வடிவத்தில் காட்சி தருவது போன்ற (சாந்தம், கோபம், அபயம் அளிப்பது) அமைக்கப்பட்டுள்ளது.

மேல்மலையனூர் அங்காளம்மன் சிம்ம வாகனத்தில் உட்கார்ந்திருக்கும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அம்மனின் முகம், யார் என்ன நினைத்துக் கொண்டு அம்மனை பார்க்கிறார்களோ அந்த வடிவத்தில் காட்சி தருவது போன்ற (சாந்தம், கோபம், அபயம் அளிப்பது) அமைக்கப்பட்டுள்ளது.

அம்மனுக்கு 4 திருக்கரங்கள் இருக்கின்றன. வலக்கரங்களில் உடுக்கை, கத்தி, இடக்கையில் கபாலம், திரிசூலம் ஏந்தி இடக்காலை மடித்து, வலக்காலால் பிரம்மனின் தலையை மிதித்தவாறு காட்சி தருகிறார்.

பீடத்தின் கீழே பிரம்மனின் 4 முகங்களும் உள்ளன. அருகில் சிவபெருமான் சிறிய உருவத்தில் ரிஷப வாகனத்தில் காட்சி தருகிறார். அம்மனுக்கு முன்பாக புற்று உள்ளது. (அம்மன் முதலில் புற்றுருவாக இருந்தார் என்பதற்கு சாட்சியாக இன்றும் உள்ளது).

அம்மன் நாக வடிவில் உள்ளார் என்று இன்றளவும் பக்தர்களாலும், பூசாரிகளாலும் நம்பப்பட்டு வருகிறது. நம்பியவர்களுக்கு மட்டுமே அம்மன் பாம்பு உருவில் காட்சி தருகிறார் என்று கூறப்படுகிறது.

இந்த புற்றின் வடிவம் அம்மன் காலை நீட்டி உட்காரந்திருப்பது போல் உள்ளது. இந்த இடத்தில் இருந்து எடுக்கும் மண் பக்தர்களுக்கு பிரசாமாகவும், அத்துடன் மஞ்சள், குங்குமம் வைத்து வழங்கப்படுகின்றன.

இக்கோவில் புற்றின் இடது புறத்தில் வீரன், சூரன், உக்கிரன், ரணவீரன், அதி வீரன், வீரபத்திரன், பாவாடை ராயன், சங்கிலி கருப்பன், கருப்பன், முத்து கருப்பன், வேதாளம் போன்ற காவல் தெய்வங்களும், வெளியில் நடராஜர், மாரியம்மன் சிலைகளும் பிரிதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

கோவிலின் உட்பிரகாரத்தில் வரசித்தி விநாயகர் அன்னபூரணி, கோபால விநாயகர், தலவிருட்சம் (மயில் கொன்றை) ஆகியவைகளும், வெளிப் பிரகாரத்தில் பாவாடை ராயன், மயானக் காளி, அம்மனின் பாதங்கள், கங்கை யம்மன், படுத்த நிலையில் உள்ள பெரியாயி அம்மன் ஆகியவையும் உள்ளன.