ஆதி சக்தி பீடங்கள்

ஆதி சக்தி பீடங்கள்
Sakthi-Peedam.
அருள் நிறைந்த ஆதி சக்தி பீடங்கள்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


சக்தி பீடங்கள் என்பது தாட்சாயிணி தேவியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் எழுதப்பட்ட கோவில்களாகும். சக்தி பீடங்களில் பல்வேறு சக்தி பீடங்கள் நம் தமிழகத்திலும் உள்ளன.

நவராத்திரி கொண்டாட்டத்தின் சிறப்பம்சமே சக்தி சொரூபங்களை வழிபடுவதே. அந்த வகையில் ஆதி சக்தி ரூபமான தாட்சாயிணி எனும் பார்வதி தேவியின் சக்தி பீடங்களை அறிவது வேண்டும். சக்தி பீடங்கள் என்பது தாட்சாயிணி தேவியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் எழுதப்பட்ட கோவில்களாகும்.

சக்தி பீடம் என்றால் சக்தியின் அமர்விடம் என்று பொருள். இந்தியாவில் எண்ணற்ற சக்தி பீடங்கள் உள்ளன. அவை அட்சர சக்தி பீடங்கள், மகா சக்தி பீடங்கள், ஆதி சக்தி பீடங்கள் என்று கூறப்படுகின்றன. தேவி பாகவதம் எனும் சக்தி தேவிக்கு 108 சக்தி பீடங்கள் உள்ளதாகவும், அதில் 64 சக்தி பீடங்கள் முக்கியமானதாகவும் கூறப்படுகிறது.

அட்சர சக்தி பீடங்கள் என்பவை 51 சக்தி பீடங்களாகும். மகா சக்தி பீடங்கள் என்பதை பதினெட்டு சக்தி பீடங்கள், ஆதி சக்தி பீடங்கள் என்பவை நான்கு சக்தி பீடங்கள் என்றவாறு கூறப்படுகிறது. அதுபோல் நவசக்தி பீடங்கள் மற்றும் சப்த சக்தி பீடங்கள் போன்றவாறும் உள்ளதாக புராணங்கள் மற்றும் நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் அதற்குரிய ஆதாரங்கள் ஏதுமில்லை. எப்படியாயினும் இறைவியின் இன்னருளை பெற பக்தர்கள் அனைவரும் ஒவ்வொரு சக்தி பீடத்திலும் பிரார்த்தனையையும், வேண்டுதல்களையும் செய்து வருகின்றனர்.

சக்தி பீடங்களில் பல்வேறு சக்தி பீடங்கள் நம் தமிழகத்திலும் உள்ளன.

சக்தி பீடங்கள் உருவான புராண நிகழ்வு

தேவி தாட்சாயிணி அவரது தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்கு அழைக்கப்படாமல் அவமதிக்கப்பட்டார். இதன் காரணமாக யாகத்தை அழியுமாறு சபித்துவிட்டு, தன் உடலை அந்த யாகத்திலேயே செலுத்தி எரிந்து போகிறாள். சிவனால் உருவான வீரபுத்திரர் அந்த யாகத்தை அழிக்கின்றனர். மனைவி இறந்த சோகத்தில் சிவன் தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக்கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த வேண்டி மகாவிஷ்ணு தன் சக்ராயுதத்தை விட அது தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தியது பிறகே சிவன் சாந்தமானார். அவ்வாறு வெட்டப்பட்ட தாட்சாயிணியின் உடல் துண்டுகள் விழுந்த இடங்களே சக்தி பீடமாக உருவாயின. அதுபோல் சமஸ்கிருதத்தின் 51 அட்சரங்கள் தோன்றிய இடங்களிலேயே பிறகு தேவியின் உடல் பகுதிகள் விழுந்தன என்றும் அதனாலேயே அவை 51 அட்சர சக்தி பீடங்கள் என்றும் அழைக்கப்படுகிறது என நூல்கள் கூறுகின்றன.

ஆதி சக்தி பீடங்கள்

51 சக்தி பீடங்களையும், மகாசக்தி பீடங்கள் போன்றவற்றை முற்றிலும் வழிபட முடியாவிட்டாலும், ஆதி சக்தி பீடங்கள் நான்கு மட்டுமாவது தரிசித்து அன்னையின் அருள் பெறவேண்டும் என்பது நியதி. அந்த வகையில் ஆதி சக்தி பீடங்கள் நான்கினை பற்றி அறிவோம்.

அசாமின் காமாக்யா கோவில்

அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் இருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் நீலாச்சல் மலை மீது பழமையான காமாக்யா கோவில் உள்ளது. 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும், ஆதி சக்தி பீடமாகவும் விளங்கும் இக்கோவிலின் தாட்சாயிணியின் யோனி உடல் பகுதி விழுந்த பீடமாக விளங்குகிறது. இங்கு தேவிக்கு மாதவிலக்கு நிகழ்வதாகவும், அந்த மூன்று நாட்கள் ஆலயம் திறக்கப்படாது என்பது முக்கியமானது. அந்த விழாவின்போது பக்கத்தில் ஆறு சிவப்பு நிறமாக ஓடுகிறது. காமிக்யா தேவி கோவில் அருகிலேயே தச மகா வித்யா எனப்படும் 10 தேவியருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.

கொல்கத்தா காளிகாட்காளி கோவில்

மேற்கு வங்க மாநில தலைநகரான கொல்கத்தாவின் காளிகாட் எனும் பகுதியில் காளி கோவில் உள்ளது. ஆதி கங்கை நதியின் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. தேவியின் வலது காலின் (கட்டை விரல் தவிர்த்து) விரல்கள் விழுந்த இடமாக இந்த ஆதி சக்தி பீடம் உள்ளது. காளிகா புராணத்தில் தேவியின் முகம் விழுந்த இடம் எனவும் கூறுகிறது. புராதன முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாக கங்கை ஆற்றங்கரையில் உள்ளது. இந்த காளிகாட் என்ற பெயரில் இருந்தே கொல்கத்தா என்ற நகர பெயர் உருவானதாகவும் கூறப்படுகிறது.

தாரதாரிணி கோவில்

ஒடிசா மாநிலத்தின் பெர்காம்பூர் நகரில் இருந்து 40 மைல் தூரத்தில் உள்ள கஞ்சாம் மாவட்டம் புருஷோத்தம்பூரில் ருசிகுல்ய ஆற்றின் அருகில் உள்ள மலை மீது தாரதாரிணி கோவில் உள்ளது. 999 படிகட்டுகளில் மலை மீது ஏறி 1,000 படியில் ஆலயம் உள்ளது. தேவியின் இரு மார்பகங்களும் விழுந்த பகுதியாக உள்ளது. ஆகவே இங்கு இரு தேவியராய் தாரா மற்றும் தாரிணி தெய்வ சிலைகளாய் வழிபடப்படுகிறது. ஒடிசாவின் தெற்கு பகுதி மக்களின் குலதெய்வமாக விளங்கும் இக்கோவில் ஆதி சக்தி பீடமாக விளங்குகிறது.

விமலா சக்தி கோவில்

அன்னையின் உடல் பாகத்தில் நாபி விழுந்த பகுதியே விமலா தேவி சன்னதி. இது பூரி ஜெகந்நாதர் கோவில் வளாகத்தில் உள்ளது. இருப்பினும் இப்புகழ் பெற்ற தலத்தில் முதலில் குடியேறியவர் அன்னை விமலைதான். சக்தி பீடமாக விளங்கிய இப்பகுதியிலேயே ஸ்ரீஜகந்நாதர் குடிகொள்ள விரும்பி பின்பு ஜெகந்நாதர் இங்கு குடியேறியதாக புராண தகவல் கூறுகிறது. ஆதி சக்தி பீடமாக விளங்கும் விமலை அன்னை நிவேதனம் முதலில் செய்யப்பட்ட பிறகே ஜகந்நாதர்க்கு நிவேதனம் செய்யப்படும். துர்க்காஷ்டமி விழா மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.