Showing posts with label அபான வாயு முத்திரை. Show all posts
Showing posts with label அபான வாயு முத்திரை. Show all posts

அபான வாயு முத்திரை

அபான வாயு முத்திரை: உயிர் காக்கும் இருதய முத்திரை (mudra of the heart) !!!

நமது மோதிர விரல் நுனியும் நடு விரல் நுனியும் பெருவிரல் நுனியை தொடும்படி வைத்து
ஆள்காட்டி விரலை பெருவிரலின் அடிப்பாகத்தை தொடும்படி வைத்து, சிறுவிரலை நேராக நீட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரங்களிலும் செய்யலாம்.

இந்த முத்திரை நெஞ்சு வலி மற்றும் ஹார்ட் அட்டாக் போன்ற அனைத்து இருதய சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும். இதனால் இதற்கு "மிருத்யு சஞ்சீவி" என்று பெயர். இந்த முத்திரை பயிற்சி நம்மை சாவிலிருந்து காப்பாற்றும்.
இந்த முத்திரை "அபான முத்திரை" மற்றும் "வாயு முத்திரை" இரண்டின் தொகுப்பு ஆகும். இந்த முத்திரை பயிற்சி செய்வதால் அந்த இரண்டு முத்திரை பயிற்சி செய்வதற்கு சமமாகும்.

அபான வாயு முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:
• இது உயிர் காக்கும் முத்திரை. இருதயத்தை பலப்படுத்தி இருதய நோய் வராமல் பாதுகாக்கும்.
• உயர் இரத்த அழுத்த நோய் 15 நிமிடங்களில் குறையும்,
• நெஞ்சு படபடப்பு குறையும்.
• வாயுக்கோளாறு, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
• மூலநோய் குணமாகும்.
• உடலில் கழிவுகளை வெளியேற்றும் உறுப்புகள் நன்றாக இயங்கி உடலில் சக்தி அதிகமாகும்.
• சிறுநீர்ப்பை உறுப்புகளில் உள்ள தடைகள் நீங்கி சிறுநீர் சிரமமில்லாமல் வெளியேறும்.
• உடல் உறுப்புகளின் வலி அனைத்தும் குறையும். (உம்- தலைவலி, உடல்வலி, மூட்டு வலி, கனுக்கால் வலி முதலியன ).
• இரைப்பை மற்றும் பெருங்குடலில் உள்ள வாயு தொல்லைகளை நீக்கும்.
• உடல் உள் உறுப்புகளில் உள்ள கெட்ட சக்திகளை நீக்கும். (TOXINS)
• வியர்வை குறைபாடுகள் உள்ளவர்கள் இந்த பயிற்சி செய்தால் வியர்வை நன்றாக வெளியேறும்.
• இருதயத்தில் இரத்த நாளங்களில் ஏதாவது தடை இருந்தால் (BLOCK) அது நீங்கி நெஞ்சு வலி குறையும்.
• இந்த முத்திரை பயிற்சி தொடர்ந்து செய்துவந்தால் இருதயம் பலப்படும்.
• ஹார்ட் அட்டாக் சமயத்தில் இந்த முத்திரை பயிற்சி உடனடியாக செய்தால் இது "சார்பிட்ரேட்" உயிர் காக்கும் மாத்திரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்குமோ அதேபோல் நம்மை காப்பாற்றும்.