Showing posts with label எளிய பரிகாரங்களும் மிக பெரிய பலன்களும். Show all posts
Showing posts with label எளிய பரிகாரங்களும் மிக பெரிய பலன்களும். Show all posts

எளிய பரிகாரங்களும் மிக பெரிய பலன்களும்

எளிய பரிகாரங்களும் மிக பெரிய பலன்களும்

நவகிரக பாதிப்புகளிலிருந்து விடுபட சில பரிகாரங்களை தொடர்ந்து செய்தால் நம்முடைய கஷ்டங்களின் தாக்கம் குறையும் என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள்.அவைகள் என்ன என்று பார்க்கலாமா ?

காகத்திற்கு உணவு அளித்தல் .இதை நாம் நிறைய வீடுகளில் பாத்திருப்போம்.

பறவைகளுக்கு தாகம் தீர மாடியில் நீர் வைத்தல்.

பசுவிற்கு அகத்தி கீரை,பச்சரிசி ,வெல்லம் கொடுத்தல்.

எறும்பு உண்ண பச்சரிசி மாவில் கோலம் போட  வேண்டும்.எறும்பிற்கு உணவு அளித்தால் 108 பிராமிணர்கள் சாப்பிடுவதற்கு சமம்.

மீன்களுக்கு பொரி அளித்தல்.மதுரைக்கு அருகில் உள்ள  திருப்பரங்குன்றம் முருகன் கோவில்களில் அங்கு வரும் பக்தர்கள் பொரி வாங்கி மீன்களுக்கு போடுவார்.
மலை மேல் உள்ள கோவில்களில் குரங்குகள் நிறைய இருக்கும் .அதற்கு வாழைப்பழம் கொடுக்க வேண்டும்.

கோவிலில் உள்ள விளக்கிற்கு எண்ணெய்  ஊற்றுதல் சிறந்த பலனை கொடுக்கும்.

ஊனமுற்றவர்களுக்கு உணவு ,உடை அளிக்க வேண்டும்.

அரச மரத்திற்கு நீர் ஊற்றுதல் .

அன்ன தானம் ,நீர் பந்தல் போன்றவைகளை செய்தல் வேண்டும்."நிழலின் அருமை வெயிலில் தெரியும்" என்பது  போல ஒருவனுக்கு வயிறார உணவு கொடுப்பதும் ,தாகம் என்று வருபவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுப்பதும் எல்லாவற்றையும் விட மிகச் சிறந்தது .சித்திரை மாதத்தில் வரும் மதுரை சித்திரை திருவிழா காலத்தில் மக்கள் நீர் மோர் கொடுத்தும் ,நீர் கொடுத்தும் புண்ணியத்தை சேர்ப்பர் .

உங்களுக்கு எவையெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்யுங்க .நம்ம கையாலே பிறருக்கு உணவு அளிப்பது மிக சிறந்தது .அதுவும் பறவைகள்,எறும்புகள் போன்றவை வாய் பேச முடியாத ஜீவராசிகள் .அவர்களுக்கு செய்யும் சேவையே நாம் கடவுளுக்கு செய்யும் சேவையாகும் .

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்கள் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..⚡🌸🍁🌺🌹🌼🐋🐦🐥🐤