Showing posts with label கோவில் படிகட்டினை தாண்டி செல்வது ஏன் தெரியுமா?. Show all posts
Showing posts with label கோவில் படிகட்டினை தாண்டி செல்வது ஏன் தெரியுமா?. Show all posts

கோவில் படிகட்டினை தாண்டி செல்வது ஏன் தெரியுமா?

கோவில் படிகட்டினை தாண்டி செல்வது ஏன் தெரியுமா?

                    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

கோவிலின் நுழைவாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே ..ஏன் தெரியுமா?ஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும். பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும்.

ஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும். பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும்.

இதன் மூலம் நம் உடலை தயார் படுத்திகொண்டு முதலில் கோபுரத்தையும் அதில் உள்ள கலசங்களையும் பார்த்து வணங்க வேண்டும். பின்னர் துவாரபாலகர்களின் அனுமதியை வாங்கிகொண்டு உள்ளே செல்ல வேண்டும். உள்ளே செல்லும் முன் அங்குள்ள வாயிற்படியை கடந்து செல்ல வேண்டும்.

அந்த படியை தாண்டும் போது, ” நான் கொண்டு வந்த எதிர்மறை வினைகள், எதிர்மறை எண்ணங்கள், கெட்ட செயல்கள், கவலைகள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டு உள்ளே செல்கின்றேன்.

இனி ஆண்டவனின் கருணையுடன் கூடிய ஆசிர்வாதமும், நேர்மறை ( நல்ல ) வினைகளுமே எனக்கு கிடைக்க வேண்டும் ஆண்டவா ” என்று கும்பிட்டவாறே அந்த படியை தாண்ட வேண்டும். அந்த படியின் மேல் நின்று கடந்தால் நாம் அவற்றை கூடவே உள்ளே எடுத்து செல்வதாக அர்த்தம்.

ஒரு கோவில் என்பது நாள் முழுவதும் கூறப்படும் மந்திரங்களாலும், நாதஸ்வரம், கெட்டி மேள சத்தங்களாலும், பேசப்படும் மங்களகரமான வார்த்தைகளாலும், முழுவதும் நேர்மறை எண்ணங்களாலேயே நிரம்பியிருக்கும்.
எனவேதான் கோவிலுக்கு சென்று அந்த நேர்மறை எண்ணங்களை பெற்று உயர்வுடன் வாழுங்கள் என்று வாழ்த்துகிறோம்.