Showing posts with label சர்க்கரை நோய் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கலாமா?. Show all posts
Showing posts with label சர்க்கரை நோய் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கலாமா?. Show all posts

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கலாமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கலாமா?

கருத்தரிக்கும் பெண்ணின் உடல் நிலை சாதாரணமாக இருக்கும்பட்சத்தில், கருவுறுதலுக்கு முன்பு, பிரத்யேகப் பராமரிப்பு எதுவும் தேவையில்லை. ஆனால், சர்க்கரை நோய், வலிப்பு, இதயநோய், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடும் முன்பே, முழு உடல் பரிசோதனை செய்து, மருந்துகள் எடுத்துகொண்டு, உடலை கருத்தரிக்க ஏற்றநிலையில் வைத்துகொண்டபிறகு, கருவுறுதல் நல்லது.

இதனால் கர்ப்பகாலம்-பேறுகாலத்தில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கலாம். நீரிழிவு இருக்கும் கர்ப்பிணிகளை மகப்பேறு மருத்துவர் மட்டுமின்றி சர்க்கரை நோய் நிபுணரும் தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும். சிறுவயதுமுதல் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, கர்ப்பகாலத்திலும் இன்சுலின் கண்டிப்பாக அவசியம்.

மாத்திரை பயன்படுத்துவோர் கூட, இன்சுலின் ஊசிக்கு மாறுவது நல்லது. நீரிழிவு மாத்திரைகளால் குழந்தைக்கு ஏதேனும் உடல் நலக்குறைபாடு ஏற்பட வாய்ப்புண்டு. பருவ வயதில் சர்க்கரைநோய்க்கு ஆளானவர்களாக இருந்தால் ஊசி, மாத்திரை இரண்டையும் தவிர்த்துவிட்டு உணவு-உடற்பயிற்சி வாயிலாக, நீரிழிவை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.

குடும்பத்தில் ஏற்கெனவே யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தால், ஐந்தாம் மாதத்தில் குளுகோஸ் டாலரன்ஸ் பரிசோதனை செய்து சர்க்கரையின் அளவுதெரிந்து, இதற்கேற்ப கர்ப்பிணிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.