Showing posts with label தேமல். Show all posts
Showing posts with label தேமல். Show all posts

தேமல்

இயற்கை மருத்துவதால் குணமாகும் நோய்கள் – தேமல்!

1.கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இலை ஆகியவற்றை பாலில் அரைத்து, முகத்தில் தேமல், கரும்புள்ளி உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் தேமல், கரும்புள்ளி ஆகியவைகள் குறையும்.

2.கமலா ஆரஞ்சு தோலை பொடி செய்து தினமும் தேயத்து குளித்து வந்தால் தேமல் குறையும்.

3.மலைவேம்பு இலைகளை அரைத்து அதன் சாறை தேமல் மீது பூசி வந்தால் தேமல் மற்றும் அரிப்பு குறையும்.

4.கீழாநெல்லி இலை, கொத்தமல்லி இலை இவற்றை பாலில் அரைத்து தேமல் உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் தேமல் குறையும்.

5.வெள்ளைப் பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்துத் தினமும் தோலில் தேய்த்துக் குளித்துவர தேமல் குறையும்.

6.கருஞ்சீரகத்தை வறுத்து பொடி செய்து நல்லெண்ணெயில் கலந்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வர தேமல் குறையும்.

7.முள்ளங்கிச் சாறு, எலுமிச்சைச் சாறு, தக்காளிச் சாறு மூன்றையும் கலந்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வர தேமல் குறையும்.

8.வெள்ளைபூண்டு,வெற்றிலை அரைத்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி குளித்து வர தேமல் குறையும்.

9.சந்தனத்தை எலுமிச்சைச் சாற்றில் கலந்து தேமல் உள்ள இடத்தில் தடவி வர தேமல் குறையும்.

10.நாயுருவி இலை சாறை தேமல் உள்ள இடத்தில் தினமும் தட‌வி வ‌ர‌ தேமல் குறையும்.



11.ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் தேய்த்து குளித்து வர தேமல் குறையும்.