Showing posts with label டயட்டிங் - செய்யக் கூடியவையும் கூடாதவையும் (Dos and Donts). Show all posts
Showing posts with label டயட்டிங் - செய்யக் கூடியவையும் கூடாதவையும் (Dos and Donts). Show all posts

டயட்டிங் - செய்யக் கூடியவையும் கூடாதவையும் (Dos and Donts)

டயட்டிங் - செய்யக் கூடியவையும் கூடாதவையும் (Dos and Donts)

உடல் மெலிவதற்காக சிலர் தானாகவே உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்வார்கள். அப்படி செய்யக் கூடாது. அது தேவையற்ற பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் அதற்கு முதல் படி உணவுச் சத்து நிபுணரிடம் ஆலோசனைப் பெற வேண்டும்.

செய்யக் கூடியவை

பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் அதிகம் சாப்பிடலாம். அவற்றின் கலோரி குறைவாக இருந்தாலும் கால்ஷியம் மற்றும் பிற சத்துக்கள் அதிகம் இருப்பதால் எனர்ஜி கிடைக்கும்.

தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். எட்டிலிருந்து ஒன்பது க்ளாஸ் தண்ணீர் குடிப்பதால் உடல் சக்தியை மேன்படுத்தும். புத்துணர்வுடன் இருக்க நீர்ச்சத்து உடலில் சமன் நிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

தினமும் இருபது நிமிடமாவது உடற்பயிற்சி செய்வது நல்லது. உடலை வலுவாகவும் ஃபிட்டாகவும் வைக்க பயிற்சி அவசியம். கடினமான பயிற்சிகள் செய்யத் தேவையில்லை. வாக்கிங், ஜாகிங் அல்லது ஸ்விம்மிங் செய்யலாம்.

செய்யக் கூடாதவை

கடைபிடிக்க முடியாத வகையில் டயட் இருக்க‌ வேண்டாம். எளிமையான டயட்டிங் (சத்துணவு, நல்ல உறக்கம், போதிய நீர்ச் சத்து, குறைவான சர்க்கரை, ஜன்க் உணவுகளைத் தவிர்த்தல்) போதுமானது.

சிலர் டயட்டிங் என்று நினைத்து குறைவாக சாப்பிடுவார்கள் . அப்படி செய்யக் கூடாது. உண்ணும் உணவின் அளவு முக்கியம்.

ரெட் மீட், போர்க், பீஃப் போன்றவற்றைத் தவிர்க்கலாம்