Showing posts with label நெல்லி மணப்பாகு மருந்து. Show all posts
Showing posts with label நெல்லி மணப்பாகு மருந்து. Show all posts

நெல்லி மணப்பாகு மருந்து

வீட்டிலேயே எளிதாகத் தயார் செய்து கொள்ளக் கூடிய மருந்துகளுள் ஒன்று நெல்லி மணப்பாகு.


நோயெதிர்ப்புத் திறன் வளர்க்க, இரத்த சோகை, உடல் தளர்ச்சி நீங்க, நெல்லி மணப்பாகை பயன்படுத்தலாம்.
நெல்லி மணப்பாகு தயாரிக்கும் முறை:
நெல்லிவற்றல் - 300 கிராம்
கருப்பட்டி - 750 கிராம்
300 கிராம் நெல்லிவற்றலுடன் நான்கு லிட்டர் நீர் சேர்த்து அடுப்பேற்றி ஒரு லிட்டராக வற்ற வைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதனுடன் தூய்மைப்படுத்திய கருப்பட்டியைக் கலந்து அடுப்பேற்றி பாகுபதம் வரும்வரை சிறு தீயாக எரித்து இறக்கி வைத்துக்கொண்டால் நெல்லிமணப்பாகு தயார்!
.
அளவு:
பெரியவர்களுக்கு- 15 மில்லி
சிறியவர்களுக்கு -5 மில்லி