Showing posts with label தொழிலாளர் தினம் உருவான விதம். Show all posts
Showing posts with label தொழிலாளர் தினம் உருவான விதம். Show all posts

தொழிலாளர் தினம் உருவான விதம்

தொழிலாளர் தினம் உருவான விதம்


மே 1தொழிலாளர் தினம்….பார் முழுக்க பறந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு மருந்து போட்ட நன்னாள்.உழைக்கும் வர்க்கத்திற்கான உயரிய நாள்.காலவரையற்ற உழைப்பு, மிருகத்தனமான,கொத்தடிமைத்தனமான இன்னல்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள தொழிலாளர் அமைப்புகள் மேற்கொண்ட தொடர் போராட்டங்கள்…பட்ட கஷ்டங்கள் கணக்கற்றவை.

தொழிலாளர் கூட்டத்தின் முதல் உரிமைக்குரல் 1806ஆம் ஆண்டு அமெரிக்காவிலும்,ஆஸ்திரேலியாவிலும் ஒலித்தது.அதுவரை நடைமுறையில் இருந்த 15 முதல்20 மணி நேர வரையிலான அசுரத்தனமான உடல் உழைப்பை எதிர்த்து 10மணி வேலை நேரம் கேட்டு ஒலித்தக் குரல்கள் முதலாளி வர்க்கத்தால் ஒழித்து கட்டப்பட்டன.30 வருடங்கள் உறங்குவதாய் தெரிந்த உணர்வுகள் 1837 லில் மீண்டும் புது எழுச்சி கண்டது.இம்முறை சீற்றம் கொண்டது..சீறி எழுந்தது.முதலாளி வர்க்கத்தின் செவிட்டு செவிப்பறைகளை அடித்து கிழித்தது.ஆட வைத்தது.விளைவு…

பாகுபாடோடு ஓர் சட்டம்…அமெரிக்காவில் நடைமுறைபடுத்தப்பட்டது.அரசுப்பணியில் இருப்பவர்களுக்கு மட்டும் 10 மணிநேரம் வகுக்கப்பட்டது.மற்ற தொழிலாளர்கள் கைவிடப்பட்டவர்கலாயினர்.இதனால் புரட்சியின் வேகம் மீண்டும் புதுப்பொலிவு கண்டது..வேகம் கொண்டது…1856 இல் தொளிலாளர் வர்க்கத்தின் தொடர் போராட்டம் மே 1 அன்று விடியல் கண்டது.

8மணி நேர வேலை.8 மணி நேர மன மகிழ்வு…8 மணி நேர உறக்கம்..

மே 1 தொழிலாளர்களின் வெற்றி நாளாய் விடியல் நாளாய் விடுமுறை நாளாய் ஆஸ்திரேலியாவில் அவதாரம் கண்டது.அந்த விடியல் உலகம் முழுக்க வியாபிக்க33 ஆண்டுகள் பிடித்தது.1889ஆம் ஆண்டு உலகம் முழுக்க ஒட்டுமொத்த தொழிலார்களின் புரட்சி விழா கொண்டாடப்பட்டது.தொழிலாளர்களின் உணர்வுகளும்,தேவைகளும் முழுமையாய் உலகம் முழுக்க ஏற்றுக்கொள்ளப் பட்ட பின்பும் இந்திய தேசத்தில் 1927 ஆம் ஆண்டுதான் நடைமுறைக்கன்டது..

அன்னன்நாளில். ..தொழிலாளர் நலம் வாழ வளம் பெருக வாழ்த்துவோமாக..