Showing posts with label கண்களையும் கவனியுங்கள். Show all posts
Showing posts with label கண்களையும் கவனியுங்கள். Show all posts

கண்களையும் கவனியுங்கள்

கண்களையும் கவனியுங்கள்
நமது சந்தோஷம், துக்கம் எதுவானாலும் அதை காட்டிக் கொடுப்பது கண்கள் தான். அப்படிப்பட்ட கண்கள் புத்துணர்ச்சியுடன் இருந்தால் தானே பார்க்க அழகாக இருக்கும்.
கண்களின் அழகை பராமரிக்க தினமும் எட்டு மணிநேரம் தூக்கம் மட்டுமல்லாமல் கால்சியம், விட்டமின்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.
அதாவது பால், பால் உணவுகள், கீரை வகைகள், முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப்பழங்கள் பச்சை காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.
கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடிகாரம் சுற்றும் முறையிலும், எதிர்முறையிலும் மூன்று முறை சுற்ற வேண்டும். மேலும் அருகில் உள்ள பொருட்களை பார்த்துவிட்டு தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும்.
கட்டைவிரலை நடுவில் வைத்துக்கொண்டு அதனை இடமாகவும் வலமாகவும் விரலை மட்டும் நகர்த்தி தலையை திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பி பார்க்க வேண்டும். தினமும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்தால் கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
நீண்ட நேரம் கணனி அல்லது தொலைக்காட்சி முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம் அல்லது கண்களுக்கு குளிர்ச்சி தரும் நீல நிறங்களை பார்க்கலாம்.
ஆரஞ்சு பழத்தை சாறாகப் பிழிந்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து கட்டியான பின்னர் ஒரு துணியில் கட்டிக்கொண்டு கண்களுக்கு மேல் ஓத்தி எடுத்தால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.