Showing posts with label மூல நோய்க்கு எளிய மூலிகை மருந்துகள். Show all posts
Showing posts with label மூல நோய்க்கு எளிய மூலிகை மருந்துகள். Show all posts

மூல நோய்க்கு எளிய மூலிகை மருந்துகள்

மூல நோய்க்கு எளிய மூலிகை மருந்துகள்:!!!

1- பிரண்டைக் கொடியின் கணுப்பகுதியை நீக்கிவிட்டு நெய் விட்டு வதக்கி புளி,பருப்பு சேர்த்து துவையல் செய்து வாரம் இரு முறை சாப்பிட்டு வர மூலம் கரைந்து விடும்.
2- மூல நோய்க்கு துத்தி இலை சிறந்த மருந்தாகும். இரண்டு கை அளவு துத்தி இலை,நறுக்கிப் போட்டு, சிறிது மஞ்சள் தூள்,சிறிய வெங்காயம் பத்து,அரிந்து போட்டு விளக்கெண்ணை விட்டு வதக்கி மிளகுத்தூள்,உப்பு சிறிது சேர்த்து பத்து நாள் தொடர்ந்து சாப்பிட மூல நோய் குணமாகும்.
3- வெளி மூலத்திற்கு துத்தி இலை ஒரு கை பிடி அளவு எடுத்து அதனுடன் சிறிது மஞ்சள்தூள் விளக்கெண்ணை விட்டு வதக்கி இளம் சூட்டுடன் ஆசன வாயில் வைத்து இரவில் கட்டிவர சில நாட்களில் வெளி மூலம் சுருங்கி விடும்.(தினமும் கட்டவும்)
4- நன்றாக செழித்து வளர்ந்த குப்பைமேனி செடியைத் தேவையான அளவு எடுத்து வந்து தண்ணீரில் அலசி சுத்தம் செய்து வெயிலில் போட்டு நன்கு காய விடவும். காய்ந்த பின் இலை,வேர்,தண்டு அனைத்தையும் இடித்து தூள் செய்து வைத்துக்கொள்ளவும்.இதில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு வெண்ணை ஒரு எலுமிச்சை அளவு சேர்த்துப் பிசைந்து காலை , மாலை என நாற்ப்பது நாள் சாப்பிட்டு வர அனைத்து மூல வியாதியும் குணமாகும் .
இந்த மருந்துகளைச் சாப்பிட்டு வரும் போது அதிக காரம்,பச்சை மிளகாய்,கோழிக்கறி சேர்க்கக் கூடாது.மிளகு சேர்த்துக் கொள்ளலாம். உடல் உறவு கூடாது