Showing posts with label அம்மை நோயை (Chicken-Pox) சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. Show all posts
Showing posts with label அம்மை நோயை (Chicken-Pox) சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. Show all posts

அம்மை நோயை (Chicken-Pox) சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது

அம்மை நோயை (Chicken-Pox) சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது

அம்மை நோய் வந்தால் அதை குணப்படுத்த மருந்து இல்லை. அதேநேரம் அதன் வீரியத்தை மட்டுப்படுத்தவும், அம்மை நோயால் வரக்கூடிய மற்ற நோய்களைத் தடுக்கவும் ஆன்ட்டி வைரல் மாத்திரைகள் இருக்கின்றன.



அம்மை நோயை (Chicken-Pox) சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது


One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

அம்மை நோய் அறிகுறிகள்
பொதுவாகவே வெப்பத்தை தாங்கக்கூடிய வைரஸ், வெப்பத்தை தாங்க இயலாத வைரஸ் என வைரஸ்கள் இரண்டு வகைப்படும். வெப்பத்தை தாங்க முடியாத வைரஸ்கள் மூலம் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். வெயில் காலத்தில் இந்த பிரச்சினைகளை அதிகம் பார்க்க முடியாது. ஆனால், அம்மை நோயை ஏற்படுத்தும் வைரஸ், வெப்பத்தைத் தாங்கக்கூடிய வைரஸ் வகையை சேர்ந்தது.

சாதாரண பருவ நிலையிலும் பரவக்கூடியது. குறிப்பாக கோடை காலத்தில் அதிகரிக்கக்கூடியது. பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை என அம்மையில் பல வகை உண்டு. ‘வேரிசெல்லா சூஸ்டர்’ என்ற வைரஸ்தான் சின்னம்மை நோய் ஏற்படக் காரணம்.

‘பாராமிக்ஸோ’ குடும்பத்தை சேர்ந்த வைரஸ், தட்டம்மையை ஏற்படுத்துகிறது.

அம்மை நோயின் அறிகுறியாக முதலில் காய்ச்சல் வரும். அதைத் தொடர்ந்து பசியின்மை, உடல் பலவீனம் ஏற்படும். சின்னம்மையாக இருந்தால் உடலில் நீர்க்கட்டியைப் போன்ற சிறிய கொப்புளங்கள் தோன்றும். பின்னர் அவை கொஞ்சம் பெரிதாகி நீர்கோத்துக் காணப்படும். நிறம் மாறி கொப்புளங்களில் இருந்து நீர் வடியும்.

பின்னர், நீர் வறண்டு கொப்புளங்கள் உதிரும். கொப்புளம் உள்ள இடங்களில் வடு ஏற்படும். உடலில் அரிப்பு, தாங்க முடியாத வலி, தொடர்ந்து மிதமான காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் இந்த காலத்தில் இருக்கும். ஏழு முதல் பத்து நாட்களுக்குள் கொப்புளங்கள் உலர்ந்துவிடும்.

அம்மை தாக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தவும், வைத்தியர்கள் வந்து பார்க்க வசதியாகவும் அந்த காலத்தில் அம்மை நோய் தாக்கப்பட்டவர்களை கோவில்களில் தங்க வைத்திருப்பார்கள். அதை பலர் இப்போதும் பின்பற்றுகிறார்கள். அம்மை நோயை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

உடல் வெப்பம் அதிகமாகி நுரையீரல் காய்ச்சல் (நிமோனியா), நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மூளை காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற மற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடலாம். எனவே, அம்மை நோயால் பாதிக்கப்பட்டவரை வேப்பிலையில் படுக்க வைப்பது, வேப்பிலை அரைத்துப் போட்டுக்கொள்வதுடன் விட்டுவிடக்கூடாது. அம்மை நோய் வந்தால் அதை குணப்படுத்த மருந்து இல்லை. அதேநேரம் அதன் வீரியத்தை மட்டுப்படுத்தவும், அம்மை நோயால் வரக்கூடிய மற்ற நோய்களைத் தடுக்கவும் ஆன்ட்டி வைரல் மாத்திரைகள் இருக்கின்றன. வலி, எரிச்சல் ஆகியவற்றை தடுக்கவும் மருந்துகள் உண்டு.

அதேநேரம், அம்மை நோய் தாக்குவதை தடுக்கக் குழந்தைகளுக்கு முறையாக தடுப்பூசி போட வேண்டும். இதுவரை அம்மை நோய் வராத பெரியவர்கள்கூட தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசிகளை சரியான காலத்தில் போட்டுக்கொள்வதன் மூலம் அம்மை நோய் வராமல் தடுக்கலாம். அதேநேரம் எல்லா தடுப்பூசிகளும் எல்லா அம்மை நோய்களையும் வாழ்நாள் முழுக்க தடுப்பதில்லை.

ஆண் குழந்தைகளுக்கு ஆணுறுப்பிலோ, விதைப்பையிலோ அம்மைக் கொப்புளங்கள் தாக்கியிருந்தால் மருத்துவரிடம் கட்டாயமாக ஆலோசனை பெற்று, உரிய மருந்துமாத்திரையை உட்கொள்ள வேண்டும். பாதிப்பு கடுமையாக இருக்கும்பட்சத்தில் எதிர்காலத்தில் மலட்டுத்தன்மை ஏற்படலாம். அதேபோல் பெண் பிறப்புறுப்பில் அம்மை நோய் தாக்குதல் இருக்கும்பட்சத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கர்ப்பிணிகளை அம்மை நோய் தாக்கினால், உடனே பயப்பட அவசியம் இல்லை. மருத்துவர் ஆலோசனை மூலம் தாயையும் சேயையும் பாதுகாக்க முடியும்.