Showing posts with label ருத்ராட்சம். Show all posts
Showing posts with label ருத்ராட்சம். Show all posts

ருத்ராட்சம்

ருத்ராட்சம்


ருத்ராட்சம் அணிந்தாலே, “சாமியாராக போய்விடுவோம்" என்ற ஒரு மாற்று நம்பிக்கை எப்போதும் பரவாலாக இருந்தே வருகிறது. ஆனால் இந்த ருத்ராட்சத்தை யாரெல்லாம் அணியலாம், இதை அணிவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெளிவாக்குகிறது இக்கட்டுரை…!!!!!

பல நூறு வருடங்கள் தவத்தில் ஆழ்ந்திருந்த சிவன் கண்களைத் திறந்தபோது, அவர் உணர்ந்த பேரானந்தம், கண்ணீர்த் துளியாய் சிந்தியது. அது பூமியில் விழுந்து ருத்ராட்ச மரமாக வளர்ந்தது, என்பது வழக்கத்தில் இருந்து வரும் கதை. ருத்ராட்சத்தின் பலன்கள்: மனம், உடல், சம்பந்தப்பட்ட அத்தனைக்கும் நிவாரணியாய், உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது ருத்ராட்சம். மனதின் சலனங்களைச் சீர் செய்கிறது, தியான நிலையில் மூழ்கவைக்கிறது, சுவாசத்தைச் சுத்தப்படுத்துகிறது, உடலின் ஏழு சக்கரங்களையும் துரிதப்படுத்துகிறது எனப் பல்வேறு பலன்களை தருகிறது.

> யாரெல்லாம் இதை அணியலாம்:

வயது வரம்பில்லாமல் மொழி, இனம், தேசம், ஆண், பெண் என்கிற பேதமில்லாமல் யார் வேண்டுமானாலும் ருத்ராட்சத்தை அணியலாம். இயற்கையாகக் கிடைக்கும் ருத்ராட்சத்தை அணிபவர்களுக்கு, அதன் அத்தனை நன்மைகளும் கிடைக்கும். ஈஷா யோகா மையத்தில் கொடுக்கப்படும் ருத்ராட்சத்தின் தரம், நம்பகத்தன்மை போன்றவை சோதிக்கப்பட்ட பின்னரே கொடுக்கப்படுகிறது.

*  ருத்ராட்சத்தின் வகைகள்

> பஞ்சமுகி:

ஐந்து முகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை, 14 வயதுக்கு மேல் உள்ள யாவரும் அணியலாம். இந்த ருத்ராட்சத்தை மாலையாக மட்டுமே அணிய வேண்டும். உள்நிலையில் ஆன்மாவைச் சுத்தப்படுத்த இது உதவும்.

> த்விமுகி:

இரண்டு முகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை திருமணம் ஆனவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். திருமண பந்தத்தைப் பலப்படுத்தும். இதை கணவன் மனைவி இருவரும் அணிய வேண்டும்.

> ஷண்முகி:

இது குழந்தைகளுக்கான ருத்ராட்சம். ஆறுமுகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை 14 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் அணிய வேண்டும். மன வளர்ச்சியையும் உடல் வளர்ச்சியையும் இது அதிகரிக்கும்.

> கௌரிஷங்கர்:

இரண்டு ருத்ராட்சங்கள் ஒட்டி இருப்பது போல இருக்கும் இதை 14 வயதுக்கு மேல் இருக்கும் அனைவரும் அணியலாம். இது ஈடா, பிங்களா என்கிற சக்தி நாடிகளைச் சமநிலைக்குக் கொண்டுவருகிறது. உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் துரிதப்படுத்துகிறது.

> பதப்படுத்துதல்:

புதிதாய் இருக்கும் ருத்ராட்சத்தை சுத்தமான நெய்யில் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். கொழுப்பு நீக்கப்படாத பாலில் இன்னும் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு, சுத்தமான துணியில் துடைத்து அணிந்துகொள்ளலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை இப்படிச் செய்ய வேண்டும். சுடுநீரிலோ, சோப்போ படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மற்றபடி, எந்த விதிவிலக்கும் இன்றி எல்லா நேரத்திலும் ருத்ராட்சத்தை அணிந்திருக்கலாம். இதற்கு வாழ்க்கை முறையிலோ அல்லது உணவு முறையிலோ எந்த வித கட்டுப்பாடும் இல்லை. இதைக் கழுத்தில் மட்டுமே அணிய வேண்டும். எந்த ஒரு உலோகத்திலும் ருத்ராட்சம் படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

 கவனமாகக் கையாளவில்லை என்றால், ருத்ராட்சம் எளிதில் சேதமடைந்துவிடும். உடைந்து, விரிசல்விட்ட, சேதமடைந்த ருத்ராட்சத்தின் சக்திகள் நல்லதல்ல. அவற்றை அணியாமல் இருப்பதே நல்லது! எங்கே கிடைக்கும்: இந்த ருத்ராட்சங்கள் ஈஷா யோகா மையத்திலும் கிடைக்கின்றன. இமயமலையிலிருந்து வரவழைக்கப்பட்டு தியானலிங்கத்தில் சக்தியூட்டப்பட்ட பின்னரே அனைவருக்கும் வழங்கப்படுகின்றன.