Showing posts with label வலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம். Show all posts
Showing posts with label வலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம். Show all posts

வலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம்

வலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம்
பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்?

Share Market Training : Whatsapp : 9841986753
பங்கு சந்தை பயிற்சி : Whatsapp : 9094047040

பங்குச்சந்தை பற்றி நன்கு அறிந்த பின்னரே முதலீடு செயவும்

பங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம்
Click Below Link


இந்த ஒரு பொருள் உங்க வீட்டில் இருந்தா, கடன் தீரும், கஷ்டங்கள்
விலகும், செல்வம் பெருகும்!

இயற்கை பொருகளில் சிலவன ஆன்மீக ரீதியாகவும், இல்லறத்தில் நன்மை பெருக உதவும் என்ற ரீதியிலும் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் முதன்மை இடம் வகிப்பவை ருத்ராட்சம், சாலக்கிராமம் மற்றும் வலம்புரி சங்கு.

ருத்ராட்சம் - சிவனுக்குரியது ; சாலக்கிராமம் - விஷ்ணுவிற்குரியது ; வலம்புரி சங்கு - லட்சுமிக்குரியது. வீட்டில் சில பொருட்கள் வைத்திருந்தால் மகாலட்சுமி அவ்விடத்தில் குடிபுகுவாள் என கூறப்படும். அவற்றில் முதன்மை பொருள் தான் இந்த வலம்புரி சங்கு.

குப்பையிலிருந்து கோபுரம்!

செல்வதை அள்ளித்தரும் மகாலட்சுமியின் பார்வை பட்டால் குப்பைமேட்டில் இருப்பவன் கூட பணக்காரன் ஆகிவிடுவான் என கூறுவார். மகாலட்சுமியின் பார்வையானது ஒருவர் இழந்த செல்வம், பெயர், புகழ் போன்றவற்றை திரும்பபெற அருள்பாலிக்கும்.
1000 சிப்பி, 1000 இடம்புரி சங்கு...

ஆயிரம் சிப்பியானது ஒரு இடம்புரி சங்கு. ஆயிரம் இடம்புரி சங்கானது ஒரு வலம்புரி சங்கு. வலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம். ஆனால், வலம்புரி சங்கை வீட்டில் எப்படி வைத்திருக்க வேண்டும் என சில குறிப்புகள் கூறப்படுகின்றன...

1 வலம்புரி சங்கை வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், வலம்புரி சங்கை சுத்தமாகவும், தினமும் பூஜித்து வர வேண்டியது அவசியம்.

2  சித்திரா பௌர்ணமி, ஆணி மாத வளர்பிறை அஷ்டமி, ஆடி மாத பூர நட்சத்திரம், புரட்டாசி மாத பௌர்ணமி போன்ற ஆன்மீக சிறப்பு நாட்களில் வலம்புரி சங்கில் பால் வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்து வந்தால் கணவன் - மனைவி நல்ல ஆயுளுடன் இருப்பார்கள்.

3 தினமும் வலம்புரி சங்கில் நீர் மற்றும் துளசி போட்டு அதை தினமும் குடித்து வந்தால் ஆரோக்கியம் சிறக்கும்.

4 பஞ்சமி திதி நாளில் வலம்புரி சங்கில் தூய்மையான பசும்பால் ஊற்றி பூஜை செய்து வந்தால் குழந்தை இல்லாத கணவன் - மனைவிக்கு புத்திர பாக்கியம் கிட்டும்.

5 பிறந்த குழந்தைக்கு வலம்புரி சங்கு மூலம் பால் ஊற்றினால், குழந்தை நல்ல ஆரோக்கியம் பெறும். மேலும், இதனால் குழந்தை மேல் யாருடைய கண் திருஷ்டியும் படாது என கூறப்படுகிறது.

6 செய்வாய் தோஷம் உள்ள நபர்கள் வலம்புரி சங்கில் பசும்பால் ஊற்றி 27 செவ்வாய் கிழமைகள் அம்மனுக்கு பூஜை செய்து வந்தால் தோஷம் விலகும், திருமணம் கூடிய விரைவில் நடக்கும்.

7 உங்கள் வீட்டில் வலம்புரி சங்கை வைத்து பூஜித்து வந்தால், பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றின் தாக்கம் அண்டாது.

8 வீட்டில் வலம்புரி சங்கை வைத்து பூஜை செய்யும் வழிமுறை... வாழையிலை அல்லது தட்டில் வைத்து பூஜை செய்ய வேண்டும். வாழையிலை அல்லது தட்டில் பச்சை அரிசி அல்லது நெல் வைத்து அதன் மீது வலம்புரி சங்கை வைத்து பூஜை செய்ய வேண்டும். வலம்புரி சங்கு வடக்கு அல்லது தெற்கு முகம் பார்த்து தான் வைக்க வேண்டும். வலம்புரி சங்கில் தண்ணீர் மற்றும் துளசி வைத்து பூஜை செய்வது சிறப்பு. வலம்புரி சங்கை வைத்து பூஜை செய்யும் போது மலர்கள், தங்கம் அல்லது பணம் வைத்தும் பூஜை செய்யலாம்.

மந்திரம்! வலம்புரி சங்கின் காயத்திரி மந்திரம்... "பாஞ்ச ஜன்யாய வித்மஹே சங்க ராஜாய தீமஹி தந்தோ சங்கப் பரசோதயாத்"