Showing posts with label சிவராத்திரி காலத்தில் ஜபிக்க வேண்டிய சிவபிரானின் எட்டு திருநாமங்கள். Show all posts
Showing posts with label சிவராத்திரி காலத்தில் ஜபிக்க வேண்டிய சிவபிரானின் எட்டு திருநாமங்கள். Show all posts

சிவராத்திரி காலத்தில் ஜபிக்க வேண்டிய சிவபிரானின் எட்டு திருநாமங்கள்

சிவராத்திரி காலத்தில் ஜபிக்க வேண்டிய சிவபிரானின் எட்டு திருநாமங்கள்

1. ஸ்ரீ பவாய நம
2. ஸ்ரீ சர்வாய நமக்ஷ
3. ஸ்ரீ பசுபதயே நம
4. ஸ்ரீ ருத்ராய நம
5. ஸ்ரீ உக்ராய நம
6. ஸ்ரீ மகாதேவாய நம
7. ஸ்ரீ பீமாய நம
8. ஸ்ரீ ஈசாநாய நம
சிவராத்திரியின் நான்கு காலங்களில் பஞ்ச வில்வங்களைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி இல்லாதபோது மூன்றாவது காலமான லிங்கோற்பவ காலத்திலேனும் பஞ்ச வில்வங்களைக் கொண்டு பஞ்சமுகார்ச்சனை செய்யலாம்.
லிங்கோற்பவ காலத்தில் தான் சிவபெருமான் சிவலிங்கத்தினின்று வெளிப்பட்டு அருவமாக நின்று அன்பர்களுக்கு அருள்பாலித்தார். மூன்றாம் காலத்தில் லிங்கோற்பவ மூர்த்திக்கு நெய் பூசி, வெந்நீரால் அபிஷேகம் செய்து, எள்ளன்னம் நிவேதிக்க வேண்டும். ஊழிக்காலத்தில் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக பார்வதிதேவி ஓர் இரவின் நான்கு ஜாமத்திலும் சிவபூஜை செய்து மீண்டும் உலகைப் படைக்க வரம் பெற்ற திருநாளே மகாசிவராத்திரி. சூரியன், மன்மதன், யமன், சந்திரன், அக்னி முதலானோர் இவ்விரதத்தை அனுஷ்டித்து பேறு பெற்றுள்ளனர்.
விஷ்ணு இவ்விரதத்தை அனுஷ்டித்து சக்ராயுதத்துடன் லட்சுமியையும், பிரம்மா சரஸ்வதியையும் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. சிவராத்திரி அன்று இரவு முழுதும் கண் விழித்து வழிபாடு செய்ய இயலாவிட்டாலும் லிங்கோற்பவ காலமான இரவு 11.30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்தில் மட்டுமாவது சிவதரிசனம் செய்து வழிபடுவது சிறந்த பலன் தரும்.