Showing posts with label லிங்க புராணம் - சிவராத்திரியான இன்று என்ன செய்ய வேண்டும்?. Show all posts
Showing posts with label லிங்க புராணம் - சிவராத்திரியான இன்று என்ன செய்ய வேண்டும்?. Show all posts

லிங்க புராணம் - சிவராத்திரியான இன்று என்ன செய்ய வேண்டும்?

சிவராத்திரியான இன்று என்ன செய்ய வேண்டும்?

சிவராத்திரியில் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
1. சிவபெருமானைத் தீர்த்தவாரி செய்ய வேண்டும்.
2. மனம் மிகுந்த மலரைச் சிவபெருமானின் உச்சி
முதல் கால் வரத்தூவ வேண்டும். தூவும்
பொழுது நமச்சிவாய என்னும்
ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.
3. ஓதிக் கொண்டே வலம் வர வேண்டும்.
வணக்கம் செலுத்த வேண்டும்.
4. சிவாலயங்களை துடைப்பத்தால் பெருக்கித் தூய்மை
செய்து கோலமிடுதல் வேண்டும்.
5. நீர், பால், நெய் முதலியவற்றால் சிவபெருமானை
அபிஷேகம் செய்ய வேண்டும்.
6. சிவபெருமானுக்கு நல்ல தூய்மை ஆன ஆடையை அணிவிக்க வேண்டும்.
7. எருக்க மலர் மாலைகளைப் பெருமாள் தலையில்
வட்டமாக அணிய வேண்டும்.
8. சிவ தண்டமான கட்டங்களும், கபாலமும் ஏத்தி அவன்
புகழைப் பாட வேண்டும்.
9. அஷ்டங்க நமஸ்காரம் ஆண்கள் செய்ய வேண்டும்.
பெண்கள் ஐந்தகங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
10. விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும்.
இவ்வாறு லிங்க புராணம் கூறுகிறது.