Showing posts with label சுக்கு காப்பி. Show all posts
Showing posts with label சுக்கு காப்பி. Show all posts

சுக்கு காப்பி

சுக்கு காப்பி

இன்ஸ்டன்ட் காப்பி, பூஸ்ட், ஹார்லிக்ஸ் எல்லாம் குடிச்சது போதும். பாட்டி சொல்ற சுக்கு காப்பிய குடிச்சு பாருங்கோ.
செய்முறை
காஞ்ச இஞ்சி தான் சுக்கு.
நீங்க சுக்கு பொடி வான்கிண்டலும் சரி இல்லாட்டி நான் சொல்ற மாதரி ஆத்துல செஞ்சாலும் சரி.

இப்போ சுக்கு பொடி பன்ன
சுக்கு - 1/2 கப் (dried ginger)
மல்லி விதை - 1/4 கப்
மிளகு - 1/2 தேக்கரண்டி
ஜீரகம் - 1/2 தேக்கரண்டி
எல்லாத்தையும் வெறும் சட்டில வருது பொடி பண்ணுங்கோ.இதை நல்ல சலிச்சு டப்பால போட்டு தேவை படுரச்சே யூஸ் பன்னலாம்.

இப்போ தண்ணீய அடுப்புல வெச்சு கொதிக்க விடனும். கொதி வந்த அப்புறம் நாம தயார் பன்ன சுக்கு பொடிய சேக்கணும்.அப்பறமா பனை வெல்லம் சேக்கணும். ஒரு 3-5 நிமிஷம் அத கொதிக்க விடனும். நல்ல கரைஞ்ச பிற்பாடு சூடான சுக்கு காப்பிய ஜோரா குடிங்கோ.