Showing posts with label சர்வ கிரஹ தோஷங்களையும் போக்கும் பரிகாரம். Show all posts
Showing posts with label சர்வ கிரஹ தோஷங்களையும் போக்கும் பரிகாரம். Show all posts

சர்வ கிரஹ தோஷங்களையும் போக்கும் பரிகாரம்

சர்வ கிரஹ தோஷங்களையும் போக்கும் பரிகாரம்!!!

செவ்வாய்க்கிழமை அன்று 1/2 மீட்டர் அல்லது 1 மீட்டர் நீளமுள்ள சிகப்புத் துணி வாங்கி அதில் முடிந்த அளவு கோதுமை வைத்து கொஞ்சம் பணமும் வைத்து முடிந்து கொள்ளவும். சூரிய அஸ்தமன வேளையில் ஹனுமான் ஆலயம் சென்று அந்த சிகப்பு மூட்டையை (முடியை) ஹனுமான் பாதத்தில் வைத்து சர்வ கிரக தோஷங்களும் நிவாரணமாகக் கீழ்க்கண்ட மந்திரத்தை 27 தடவை வடக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும்.

அல்லது அர்ச்சகரிடம் கொடுத்துப் பாதத்தில் வைத்து அர்ச்சித்துத் தரச் சொல்லி வாங்கிக் கொண்டு கீழே உள்ள மந்திரத்தை 27 தடவை வடக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும். பின்னர் அந்தச் சிகப்பு முடியை அர்ச்சகருக்கு தட்சிணையாக கொடுத்து விடவும். அல்லது யாரேனும் உணவுப் பொருட்கள் தேவைப்படும் யாசகர்களுக்குத் தானமாக வழங்கவும். இதன் மூலம் கிரக தோஷப் பாதிப்புகள் நீங்கும் எனத் தந்திர சாஸ்திரம் கூறுகிறது.

மந்திரம் :-

அஞ்சனா கர்ப்ப சம்பூதம் குமாரம் ப்ரம்மசாரிணம்|
துஷ்ட க்ரஹ விநாசாய ஹனுமந்த முபாஸ்மஹே ||