Showing posts with label பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மை. Show all posts
Showing posts with label பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மை. Show all posts

பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மை

பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மை





1; பொதுவாக பாய் தரையில் விரிப்பதால்...நாம் தரையில் உறங்குவதே ஒரு சிறந்த "யோகாசனம்"

2; பிறந்த குழந்தைகளை பாயில் உறங்க வைப்பதால் அதன் முதுகு எலும்பு நேர் படுத்தப்படுகிறது, குழந்தைகளுக்கு இளம் வயது கூன் முதுகு விழுவதை தடுக்கிறது. கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு இளம் வயது முதுகு வலி வராமலும் தடுக்கும்.

3; கர்ப்பினி பெண்கள் பாயில் உறங்குவது சுக பிரசவத்திற்கு உதவிடும். பாயில் படுக்கையில் பெண்களுக்கு இடுப்பு எலும்பு விரிகிறது, இடுப்பு எலும்பு விரிந்தாலே ஆப்பரேசன் இல்லாத சுக பிரசவம்தான்.

4; மூட்டு வலி, முதுகு வலி, தோள்பட்டை தசை பிடிப்பு போன்ற பிரச்சினை உள்ளவருக்கு பாயில் உறங்குவதே ஒரு சிறந்த தீர்வு,

5; பாயில் இரு கால் விரித்து மல்லாக்க படுக்கையில் உடலின் எங்கும் இரத்த ஓட்டம் சீராக பாய்ந்து ஞாபக சக்தியை தருகிறது. பாயில் தலையணை இல்லாமல் அல்லது லேசான தலையணை உடன் உறங்குவதே சிறந்தது.

6; ஆண்கள் பாயில் படுக்கையில் அவர்களின் மார்பகம் தசை தளர்ந்து விரியும்,

7; பாய் உடல் சூட்டை உள் வாங்கக் கூடியது,

8; பெரியோர்கள் சீர்வரிசை கொடுக்கையில் பாய் இல்லாத ஒரு சீர்வரிசை கிடையாது,

9; ஒரு பாய் மூன்று ஆண்டுகள் வரை அதன் தன்மையை இழக்காது,

10; கட்டிலில் விரித்து உறங்கும் பஞ்சு மெத்தையை விட வெறும் தரையில் பாய் விரித்து உறங்குவதால்...
*உடல் உஷ்ணம்,வதையும்...

*உடலின் வளர்ச்சி,யும்...

*ஞாபக சக்தி,யையும்...

*மன அமைதி,யும்...

*நீண்ட உடல்/மன ஆரோக்கியத்தையும் தருகிறது.

பிளாஸ்டிக் பாய் சூடு உண்டாகி ஆபத்து என்பதை உணரவும்.