Showing posts with label சுகம் தரும் சோம்பு!. Show all posts
Showing posts with label சுகம் தரும் சோம்பு!. Show all posts

சுகம் தரும் சோம்பு!

சுகம் தரும் சோம்பு!

அறிவிலும் ஆக்கத்திலும் மேன்மை கொண்ட நம் முன்னோர்கள் தங்களுடைய வாழ்வில் ஆரோக்கியத்திற்கே முதலிடம் கொடுத்தனர்.“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழியை உலகிற்கு உணரச் செய்தவர்கள் தான் சித்தர்களும் ஞானிகளும்.நம் வீட்டு சமையல் அறைகளுக்குள்ளேயே மாபெரும் மருத்துவக் களஞ்சியத்தை வைத்துள்ளனர். ஒரு மனிதனின் உணவு மூலமே அவனுடைய நோய்க்கு மருந்தை கண்டறிந்து சொன்னவர்கள் சித்தர்கள்.வீட்டுச் சமையலில் ஏதோ வாசனைக்காக சீரகம், சோம்பு, இலவங்கம், வெந்தயம், கடுகு இவற்றை பயன்படுத்துகிறார்கள் என்று எண்ண வேண்டாம்.ஒவ்வொரு பொருளும் தலைசிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டது.

.சோம்புபொதுவாக உணவு விடுதிகளில் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சிறு தட்டில் சோம்பை வைப்பார்கள். சிலர் அதை எடுத்து வாயில் போட்டு சாப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். அதன் அர்த்தம் என்ன என்பது இப்போது புரிந்திருக்கும். ஆம் உண்ணும் உணவை சீரணிக்க வைக்கும் சக்தி இதற்குண்டு. எனவே எளிதில் சீரணமாகாத உணவுகள், அசைவ உணவுகள் போன்றவற்றில் சோம்பை அதிகம் சேர்த்து சமைப்பார்கள்.இதை பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைப்பார்கள். இது பூண்டு வகையைச் சார்ந்தது. வெண்மை நிறத்துடன் சிறிது பச்சை கலந்த நிறமுடையது. இந்தியா முழுவதும் இது பயிரிடப்படுகிறது. குறிப்பாக கேரளா பகுதிகளில் அதிகம் விளைகிறது.இதன் பூ, விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.
யோனிநோய் குன்மம் உரூட்சைமந் தம்பொருமல்போனமுறு காசம் பீலிகமிரைப்-பீன உரைசேர்க்கின்ற வாதமு போஞ் சீர்பெரிய சீரகத்தால்மூக்குநோ யில்லை மொழி- அகத்தியர் குணபாடம்செரிமான சக்தியைத் தூண்டஎளிதில் செரிமானம் ஆகாத உணவுகளைக் கூட செரிக்கச் செய்யும் தன்மை சோம்பிற்கு உண்டு. உணவுக்குப்பின் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாறை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வந்தால் உண்ட உணவு எளிதில் சீரணமாகும்.குடல்புண் ஆறசாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்.வயிற்றுவலி, வயிற்று பொருமல்அஜீரணக் கோளாறுகளால் வயிற்றில் வாய்வுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்றுவலி, வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படுகின்றன. இவர்கள் உடனே சிறிதளவு சோம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் சிறிது நேரத்தில் குணம் தெரியும்.கருப்பை பலம்பெறகருப்பை பாதிக்கப்பட்டால் கருத்தரிப்பு நடக்காது. இதனால் சிலர் குழந்தை பேறு இல்லாமல் கூட அவஸ்தைப் படுவார்கள். பெருஞ்சீரகத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து, வேளையொன்றுக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது பனங்கற்கண்டு கலந்தோ சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகும்.ஈரல் பாதிப்பு நீங்கஉடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு ஈரல்தான். ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகமாகி பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்.இருமல் இரைப்பு மாறநாள்பட்ட வறண்ட இருமல், இரைப்பு இவைகளால் அவதிப்படுபவர்கள் சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.சுரக் காய்ச்சல்அதிக குளிர் சுரம் இருந்தால் சோம்பை நீரில் கொதிக்க வைத்து கொடுத்தால் குளிர் சுரம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.பசியைத் தூண்டபசியில்லாமல் அவதிப்படுபவர்கள் சோம்பை தனியாக மென்று சாப்பிட்டு வந்தால் நன்கு பசியெடுக்கும்.இப்போது தெரிகிறதா சோம்பின் மகத்துவம்.