Showing posts with label தாய் சேய் நலத்திற்கான உணவுகள். Show all posts
Showing posts with label தாய் சேய் நலத்திற்கான உணவுகள். Show all posts

தாய் சேய் நலத்திற்கான உணவுகள்

தாய் சேய் நலத்திற்கான உணவுகள்

மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை ஆகியவை சரியாக இருக்கவேண்டும். தாய் உட்கொள்ளும் உணவுகள் கருவின் வளர்ச்சியிலும், குழந்தை பிறந்த பிறகு தாயின் உடல் நலனிலும் முக்கிய பங்காற்றுகிறது.

கர்ப்பகாலத்தில் முதல் மூன்று மாதங்களிலும் மற்றும் 7ம் மாத முடிவிலும் உடல்நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகள் திரவ உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும். திரவ உணவுகளான பால், இளநீர், பழம், பழச்சாறு ஆகியவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

முதல் மாதத்தில் பால் மற்றும் மென்மையான உணவையும், இரண்டு மற்றும் மூன்றாம் மாதத்தில் பாலுடன் சில மூலிகைகளான விதாரி சதாவரி, ஆஸ்திமது மற்றும் பிரமி ஆகியவற்றை சேர்த்து தென், நெய்யுடன் கலந்து குடிக்கவேண்டும்.

பிரசவ காலத்தில் இவை முக்கிய பங்காற்றும். மூன்றாம் மாத முடிவில் இருந்தே தாயின் ரத்தம் மூலம் சிசு உணவை ஏற்றுக்கொள்கிறது. ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும், எதிர்காலத்தில் மனதாலும், உடலாலும் எந்த குறைபாடும் இல்லாமல் பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

கர்ப்பிணி பெண்கள் சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்க கூடாது. கீரைகள், பழங்கள், தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துகள் அனைத்தும் கிடைக்கின்றன. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும்.

இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். எனவே மாத்திரைக்கு பதில் அதற்கு ஈடான காய்கறிகளை அதிகளவில் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்து கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களை தவிர்த்து மற்ற பழங்களை சாப்பிடுவது நல்லது. பழங்களில் ஜூஸ் செய்து கூட அருந்தலாம். கர்ப்பிணிகள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும்.

உணவு உண்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தை தவிர்ப்பது நல்லது. தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மனதை பாதிக்கும் காட்சிகளைப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்