Showing posts with label செல்வம் செழிக்க 5 எளிய வழிகள்.. Show all posts
Showing posts with label செல்வம் செழிக்க 5 எளிய வழிகள்.. Show all posts

செல்வம் செழிக்க 5 எளிய வழிகள்.

செல்வம் செழிக்க 5 எளிய வழிகள்...!!!

வணக்கம் அன்பர்களே, இறைவனை வழிபடும் ஒருமுறையை உபசாரம் என்பார்கள் . வீட்டில் இறைவனை வழிபடும் முறைகளில் பஞ்சோபசாரம் எளிமையானது.

1. இறைவனின் திருவுருவ படங்களுக்குச் சந்தனம் இடுவது
2. இறைவனின் திருப்பெயரைச் சொல்லி, மலர் தூவி அர்ச்சிப்பது.
3. சாம்பிராணி, பத்தி தூபம் இடுவது.
4. நெய்தீபம், சூடம் தீபாராதனை செய்வது.
5. நைவேத்யமாக பிரசாதம் படைப்பது.

இந்த ஐந்து முறைகளில் இறைவனை வழிபடுவதை பஞ்சோபசாரம் என்று சொல்வர். இந்த எளிய முறைகளில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் கடைபிடித்து, பயபக்தியோடு இறைவனை வணங்கி, நியாயமான வழியில் வாழ்பவர்கள் நிறைந்த செல்வமும், தீர்க்காயுளும், வாழ்வுக்குப் பின் பிறப்பற்ற நிலையும் அடைவர்.