Showing posts with label புடலங்காய். Show all posts
Showing posts with label புடலங்காய். Show all posts

புடலங்காய்

புடலங்காய்

இது சற்று நீரோட்டமுள்ள காய். ஆகை யினால் இது சூட்டு உடம்புக்கு ஏற்றதாகும். உடம்பின் அழலையைப் போக்கும். தேகம் தழைக்கும். குளிர்ந்த தேகத்துக்கு ஆகாது.
இது ஒரு சத்துள்ள உணவாகையால் கிடைத்தபோது வாங்கி சமைத்து உண்ணலாம்.
மேலும் இது பத்தியத்துக்கு மிகவும் சிறந்த காய். எளிதில் சீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும்.
வாத, பித்த, கபங் களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றைப் போக்கும். வாத, பித்தங்களை அடக்கி வீரிய புஷ்டியைக் கொடுக்கவல்லது. இதனால் ஏற்படும் தீமைக்கு கடுகுப் பொடி, கரம் மசாலா மாற்றாகும்.
இந்தக் காயை உண்டால் காமத்தன்மை பெருகும்.
புடலையில், இளத்தல், கொத்துப்புடல், நாய்ப்புடல், பன்றிப்புடல், பேய்புடல் என பல வகைகள் உள்ளது. இவற்றில் கொத்துப்புடல் மட்டுமே உணவாகப் பயன்படுகிறது.
இதனை புடல், சோத்தனி, புடவல் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.
இதன் காய் மட்டுமே உணவாகப் பயன்படுத்தப் படுகிறது.
புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லதல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சியுள்ள காயையே பயன்படுத்த வேண்டும்.
புடலையின் உட்பகுதியில் நீண்ட குழாய் போன்று காணப்படும். அதில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
அதிக அளவில் நீர்ச்சத்து இருப்பதால், கலோரிகள் குறைவு. உடல் எடை குறைப்போருக்கு ஏற்றது.
வைட்டமின் ஏ,பி,சி, தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன
படபடப்பு உணர்வு குறையும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.
மார்பகம், நுரையீரல் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.
டீடாக்ஸ் ஏஜென்டாகச் செயல்படும் என்பதால், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.
மஞ்சள்காமாலை, கல்லீரல், சிறுநீரகப் பாதிப்புகளைச் சரிசெய்யும்.
வாயுத் தொல்லை, மலச்சிக்கல் பிரச்னைகளைச் சரியாக்கும்.
செரிமான சக்தியை மேம்படுத்தும். இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் பிரச்னையைச் சரிசெய்யும்.
சரும வறட்சி, சருமப் பிரச்னைகள் தீரும்.
அசிடிட்டி, அல்சர், ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வு.
வைட்டமின் சி, பி, ஏ, புரதம், ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளதால், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
புடலங்காயின் பயன்கள்:
* உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.
* அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்கும். நன்கு பசியைத் தூண்டும்.
* குடல் புண்ணை ஆற்றும். வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும்.
* இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும்.
* மூலநோய்க் காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும்.
* நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
* சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும்.
* விந்துவைக் கெட்டிப்படுத்தும். ஆண்மைக் கோளாறுகளைப் போக்கும். உடல் தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும்.
* பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தும். கருப்பைக் கோளாறுகளைப் போக்கும்.
* கண் பார்வையைத் தூண்டும்.
* இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்.