Showing posts with label சிறுநீரகத் தொற்றைக் குணப்படுத்த - இயற்கை மருத்துவம். Show all posts
Showing posts with label சிறுநீரகத் தொற்றைக் குணப்படுத்த - இயற்கை மருத்துவம். Show all posts

சிறுநீரகத் தொற்றைக் குணப்படுத்த - இயற்கை மருத்துவம்

சிறுநீரகத் தொற்றைக் குணப்படுத்த உதவும் சில எளிய வழிகள் - இயற்கை மருத்துவம்

நம் உடலின் ஆரோக்கியத்திற்கு சத்தான மற்றும் சமச்சீரான உணவு மிகவும் அவசியம். அதை விட அந்த உணவு செரித்து அதன் மூலம் உருவாகும் கழிவுப் பொருட்கள் உடலை விட்டு வெளியேறுவது மிகவும் முக்கியம். ஒரு நாள் நமக்கு மலம், ஜலம் பிரியவில்லை எனில், நாம் படும் பாடு சொல்லி மாளாது

அத்தகைய மிக முக்கியம் வாய்ந்த உறுப்பான சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் தொற்றானது நம்மை அதிக பாதிப்பிற்கு உள்ளாக்குகின்றது. சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் தொற்றை குணப்படுத்த ஏராளமான மருந்துகள் இருந்த பொழுதிலும், அதை வீட்டில் உள்ள சில உணவுப் பொருட்களைக் கொண்டே சரி செய்து விடலாம்.

க்ரான்பெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி ஜூஸ்கள்:-

 இந்த ஜூஸ்கள் சிறுநீரக மற்றும் சிறுநீர்ப்பை தொற்றுகளை குணப்படுத்தும் அருமருந்தாகப் பயன்படுகின்றது. இந்த ஜூஸ்களில் ப்ரொஅன்ந்தோச்யானிடீன்ஸ் அதிக அளவில் உள்ளன. அவை சிறுநீர்ப்பையின் புறத்தே ஒட்டிக் கொண்டிருக்கும் பாக்டீரியாக்களை தடுக்கின்றது.

ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் கருந்திராட்சை ஜூஸ்கள் :-

இந்த ஜூஸ்கள் சிறுநீர்ப்பை அழற்சிக்கான சிகிச்சைக்கு பயன்படுகின்றன. இதைத் தவிர சவலைக்கீரை மற்றும் வெள்ளரிச்சாறு போன்றவையும் இந்த நோயை குணப்படுத்த உதவுகின்றது.

எலுமிச்சை ஜூஸ் :-

ஒரு புதிய தினத்தை ஒரு டம்ளார் வெந்நீருடன் சிறிது அளவு எலுமிச்சை சாறு சேர்த்து பருகுவதுடன் தொடங்குங்கள். எலுமிச்சை சாற்றில், இரத்தம் மற்றும் சிறுநீர் பாதையின் கார அளவை மாற்றக்கூடிய தன்மை உள்ளது. அதன் காரணமாக பாக்டீரியா தொற்றானது மட்டுப்படுவதுடன், அதன் பரவலும் கட்டுப்படுகின்றது.

வேறு சில உணவுகள் :-

சிறுநீர்ப்பை அழற்சி உள்ளவர்கள் ஒரு சில உணவுகளை உட்கொள்வது அவர்களுடைய நோயின் தீவிரத்தைக் குறைக்கும். மேலும் இத்தகைய உணவு வகைகள் உங்களுடைய சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப் பாதையானது, தன்னுடைய பழைய நிலைக்கு திரும்ப உதவி புரியும்

 ஒரு சில உணவுகள் நோயின் தீவிரத்தை குறைக்கும். வேறு சில உணவுகள் நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தும். நீங்கள் சிறுநீர்ப்பை அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்தால் ஒரு சில இயற்கை உணவுகளை உட்கொள்வது நோயின் தீவிரத்தை குறைத்து உங்களுக்கு அமைதி தரும். உங்களுடைய சிறுநீர்ப்பை அழற்சி, சிறுநீர் மற்றும் சிறுநீர்ப்பை தொற்று போன்றவற்றை குணப்படுத்த நம் வாழ்வில் பயன்படுத்தும் அன்றாட பொருட்கள் மற்றும் உணவுகள் உள்ளன. அதைப் பயன்படுத்தி உங்களின் நோயை குணப்படுத்தலாம்.

கீரை சாறு + தேங்காய் நீர் :-

கீரைகளை சாலட்களில் சேர்த்து அதை அப்படியே சாப்பிடலாம். அல்லது அதை ஜூஸாக பருகலாம். உங்களுக்கு விருப்பம் இல்லையெனில் கீரைகளை மருந்து வடிவிலும் உட்கொள்ளலாம். சம அளவுள்ள கீரைச் சாறு மற்றும் இளநீரை கலந்து ஒரு நாளைகு மூன்று வேளை பருகி வருவது சிறுநீர்த் தொற்று சம்பந்தமான நோய்களைக் குறைக்கும்.

வெள்ளரிக்காய் சாறு + எலுமிச்சை + தேன் வெள்ளரிகளை, முழுதாக காய்கறியாகவும் அல்லது சாறு எடுத்தும் அருந்தலாம். நீங்கள் எந்த வடிவில் வெள்ளரிக்காயை எடுத்துக் கொண்டாலும் அது உங்களுடைய சிறுநீர்த் தொற்றை குணப்படுத்தும். இதை விட ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கப் புதிய வெள்ளரிச்சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் போன்றவற்றை கலந்து ஒரு நாளைக்கு 3 முறை அருந்தி வருவது அதிக பலன்களைத் தரும்.

பச்சை காய்கறிகள் + பழங்கள் நீங்கள் சிறுநீரக அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்தால், கேரட், கருந்திராட்சை, வெள்ளரி மற்றும் கீரை சாறுகள் போன்றவற்றை தினசரி எடுத்துக் கொள்வது உங்களுக்கு அதிக பயன் தரும். உங்களுக்கு சிறுநீர்ப்பை அழற்சி மற்றும் சிறுநீர்ப்பை தொற்று போன்ற நோய்கள் இருந்தால், உங்களுடைய தினசரி உணவு பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுடைய உணவில் பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் அதிகம் இடம் பெறுவது மிகவும் அவசியமாகும்.