Showing posts with label ஆன்லைனில் ஃபர்னிச்சர்-களை வாடகைக்கு எடுப்பது சரியா?. Show all posts
Showing posts with label ஆன்லைனில் ஃபர்னிச்சர்-களை வாடகைக்கு எடுப்பது சரியா?. Show all posts

ஆன்லைனில் ஃபர்னிச்சர்-களை வாடகைக்கு எடுப்பது சரியா?

ஆன்லைனில் ஃபர்னிச்சர்-களை வாடகைக்கு எடுப்பது சரியா?

ஆன்லைனில் ஃபர்னிச்சர்-களை வாடகைக்கு எடுப்பது சரியா..? தவறா..?


               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

வடகை விட்டில் இருக்கும் பலருக்கு சோஃபா, கட்டில் போன்றவற்றை வாங்குவது கூடுதல் செலவு என்பதை விட அதிகச் செலவு ஆகும். அதற்கு உதவுவதற்காகவே தற்போது ஃபனிச்சர்களை வாடகைக்கு எடுக்கும் பழக்கம் நகரத்தில் வாழும் பலருக்கு அதிகரித்துள்ளது. மொத்தமாக வாங்கிச் செலவை கூட்டிக்கொள்ளாமல், பராமரிப்பு செலவை ஏற்றிக் கொள்ளாமல் பல நன்மைகளை இது அளிக்கின்றது.

எனவே வாடகைக்கு எடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இது உங்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

வாங்கும் போதும், வாடகைக்கு எடுக்கும் போது என்ன செலவு ஆகும்?
ஆடம்பரமாக வாழக்கூடிய ஒரு வீட்டின் சோஃபா, தூங்கும் அறை, சமையல் அறை போன்று அனைத்து ஃபர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுக்க வேண்டும் என்றால் மாதத்திற்கு 10,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை செலவு ஆகும். அதுமட்டும் இல்லாமல் வீட்டில் ஃபர்னிச்சர் பொருட்களை வைக்க, வீடு மாறும் போது மாற்றி வைக்க, சுத்தம் செய்ய மற்றும் பராமரிப்பு போன்றவற்றையும் வாடகை கட்டணத்திலேயே அடங்கும். ஒரு வீட்டின் படுக்கை அறை ஃபர்னிச்சர் பொருட்கள் அனைத்தும் வாடகைக்கு எடுக்க மாதம் 1,2000 ரூபாய் மட்டுமே செலவு ஆகும். இதையே நீங்கள் மொத்தமாக வாங்க வேண்டும் என்றால் 35,000 ரூபாய் வரை செலவு ஆகும்.

அதிகப் பயணச் சுமைகள்

இரண்டு படுக்கை அறைகள் கொண்ட ஒரு வீட்டின் ஃபர்னிச்சர் பொருட்களை வீடு மாற்றும் போது எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் 20,000 ரூபாய் முதல் 30,000 வரை தேவைப்படும். இடம் மாற்றும் போது ஆகும் சேதங்கள் வேறு ஆகும்.

வாடகை சேவை அளிக்கும் நிறுவனங்கள்
ஃபுரலென்கோ, சிட்டி ஃபர்னிஷ் மற்றும் ரென்ட் மோஜோ உள்ளிட்ட நிறுவனங்கள் பூனே, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஃபர்னிச்சர் வாடகைக்கு அளிக்கும் சேவைகளை அளிக்கின்றன.

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை
சில வாடகை சேவை நிறுவனங்கள் வாடகைக்கு ஃபர்னிச்சர்கள் எடுக்கும் போது சிறு சேதங்களை இலவசமாகவே பராமரிப்பு செய்துகொள்கின்றனர். ஆனால் இது அவர்கள் கொள்கைகளைப் பெருத்தது. இதுவே ஒரு முறை செலவாகப் பொருட்களை வாங்கும் போது சில ஆண்டுகள் மட்டும் பழுது பார்க்கும் அல்லது மாற்றி அளிக்கக் கூடிய வாரண்ட்டி கிடைக்கும்.

இது உங்களுக்கானதா?
நீங்கள் பார்க்கும் வேலை அடிக்கடி இடம் மாறக்கூடியது அல்லது சிறிது காலத்திற்கு வேறு இடங்களுக்கு இடம் பெயர முடிவு செய்துள்ளீர்களா? நீங்கள் இந்த நிலையில் இருக்கின்றீர்கள் என்றால் தாற்காலிகமாக வாடகைக்குப் பொருட்களை வாடகைக்கு எடுக்க வேண்டும் என்பதே சிறந்த முடிவு ஆகும்.