Showing posts with label சங்குமுத்திரை - தைராய்ட் சுரப்பிகளை சிறந்த முறையில் இயங்கச் செய்கிறது. Show all posts
Showing posts with label சங்குமுத்திரை - தைராய்ட் சுரப்பிகளை சிறந்த முறையில் இயங்கச் செய்கிறது. Show all posts

சங்குமுத்திரை - தைராய்ட் சுரப்பிகளை சிறந்த முறையில் இயங்கச் செய்கிறது

சங்குமுத்திரை

#குரல்வளம் கூடி #திக்குவாய் நீங்க , #தொண்டை #பாதிப்புகள், #தைராயீடு #பிரச்சனைகள், #ஜீரண #கோளாறுகளில் இருந்து விடுபட #சங்கு முத்திரை.
---------------------------------------------

தைராய்ட் சுரப்பிகளை சிறந்த முறையில் இயங்கச் செய்கிறது. தொண்டை சம்மந்தமான நோய்களைப் போக்கி, ரத்த சுத்தி தந்து, ஜீரணக் கோளாறுகளையும் போக்க வல்லது .இனிமையான குரல் வளத்தை தரவல்லது.

மூளை சோர்வடையாமல், மனது முழு நாளும் மகிழ்ச்சியோடு இருக்கவும் பேருதவி புரிகிறது.

நம்கலாச்சாரத்தில் சங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பழங் காலத்திலிருந்தே சங்கு வடிவத்தை மக்கள் தங்களது அரண்மனை வாசலில் வடிவமைத்து வைத்தனர்.

பழங்காலத்திலிருந்தே சங்கு ஒலி எழுப்பப்பட்டு வந்தது. பூஜை வழிபாடுகாலங்களில் சங்கு ஒலிக்கும் முக்கியத்துவம் தரப்படுவதால் அங்கே லட்சுமி கடாட்சம் உண்டாகிறது.

காலையில் எழுந்த உடன் குளித்து முடித்து விட்டு குபேரன் படத்தின் முன்பு நல்ல எண்ணெய்+நெய் சம விகிதத்தில் கலந்து சங்கு முத்திரையை செய்தபடி 16 நிமிடங்கள் குபேர மூலமந்திரத்தை ஊதிப் பழகுங்கள். இப்படி 48 தினங்கள் செய்து வந்தால் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழும்.

அடுத்ததாக ஒரு நாளுக்கு 16 நிமிடங்கள் வீதம் மூன்று வேளைகள் செய்தல் வேண்டும்.

3x16=48 நிமிடங்கள் சங்கு முத்திரையின் விகிதப்படி ஒரு நாளுக்கு 48 நிமிடங்களுக்கு மேல் செய்தல் வேண்டாம். மேலும் இதைச் செய்வதால் கூடுதல் பலன்களாக, விசுத்தி சக்கரம் வலுவடைந்து குரல் வளம் கூடி திக்குவாய் நீங்கி, சரளமாகப் பேசுகின்ற திறமையும் கூடிவிடும்.

சங் என்ற வடமொழிச் சொல்லுக்கு `நன்மை யைத் தருவது' என்றும், `கு' என்பதற்கு அதிகமாக அருள்வது என்றும் பொருள்.

#சங்குமுத்திரை
------------------------
செய்முறை: இடது பெருவிரலை வலது உள்ளங்கையில் பதியும் படி வைத்து வலது விரல்களால் (பெரு விரல் தவிர்த்து) அதை இறுக மூடிக் கொள்ளவும்.

வலது பெருவிரல், இடது கையின் பிற நான்கு விரல்களையும் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். சங்கு முத்திரை செய்யும் போது "ஓம் பாஞ்ச ஜன்யாய வித்மஹே பவமானாய தீமஹி, தந்தோ சங்க: ப்ரசோதயாத்'' என்ற சங்கு காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும்.