Showing posts with label வாழைப்பூவை உணவாக இருவாரம் உட்கொண்டால். Show all posts
Showing posts with label வாழைப்பூவை உணவாக இருவாரம் உட்கொண்டால். Show all posts

வாழைப்பூவை உணவாக இருவாரம் உட்கொண்டால்

வெட்ட வெட்ட மீண்டும் துளிர்விடும் வாழை மரத்தின் பயன்பாடுகள்

எண்ணிலடங்காதவை. இதில் வாழைப்பூவும் முக்கிய அங்கம் வகிக்கின்றது. வாழைப்பூவை உணவாக இருவாரம் உட்கொண்டால் இரத்தத்தில் கொழுப்புத்தன்மை, பசைத்தன்மைகள் குறைந்து இரத்த ஓட்டம் சீரடையும். இரத்த ஓட்டம் சீரடையும் பட்சத்தில் ஆக்ஸிஜன், இரும்புசத்து அதிகப்படியாக உட்கிரகிக்கப்படுவதால் ரத்த சோகை என்பது தலை தூக்காது. துவர்ப்பு தன்மையை தன்னகத்தே அடக்கியுள்ள வாழைப்பூ இரத்தத்தில் கலக்கும் அதிக அளவு சர்க்கரையை கூட மட்டுப்படுத்தும்.

இன்றைய மாறுபாடான உணவு முறை பழக்கம் மன உளைச்சலால் ஏற்படும் செரியாமை இவைகளால் வாயு சீற்றம் அதிகமாகி வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இப்புண்கள் ஆற வாழைப்பூவை குறைந்தது மாதத்துக்கு 5 நாட்கள் சமைத்து உண்ணலாம். மூல நோய்கள், ரத்தம் வெளியேறுதல், உள் மூல - வெளி மூல புண்கள், கடுப்பு, மலச்சிக்கல், சீதபேதி, வாய்ப்புண், வாய்துர்நாற்றம் இவைகள் எல்லாம் நிவாரணமாக்கும் தன்மையை தன்னகத்தே கொண்டது வாழைப்பூ. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறு, மாதவிடாய் பிரச்னைகளை களைந்தெறியும் தன்மை கொண்டது.
மாதவிலக்கு சமயத்தில் சிலருக்கு கடுமையான வலி இருக்கும். கருப்பையில் கிருமிகளின் தாக்கத்தால் வெள்ளை போக்கு ஏற்படுகிறது. கருப்பையில் ஏற்படும் நீர் கட்டிகள், நார் கட்டிகள் போன்றவற்றால் பெண்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் வலியை போக்க கழற்சிகாய் பயன்படுகிறது. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வீக்கத்தை கரைக்ககூடிய தன்மையை கொண்டது.

தற்போது நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதில்லை. இரசாயனம் கலந்த உணவையே சாப்பிட நேரிடுகிறது. மேலும், போதிய உடற்பயிற்சியின்மை, சில நேரங்களில் அதிக வேலைப்பளு, சரியான நேரத்திற்கு உணவருந்தாமை போன்றவையால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழந்து சர்க்கரை நோயை உண்டாக்குகின்றன. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

இரத்த மூலம்
மலம் வெளியேறும்போது இரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை இரத்த மூலம் என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும்.

உடல் சூடு
உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.

வயிற்றுக் கடுப்பு நீங்க
சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

பெண்களுக்கு
பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.

வெள்ளைப்படுதல்
வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை இரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

கைகால் எரிச்சல் நீங்க
கை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும்.

இருமல் நீங்க
வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ இரசம் செய்து அருந்திவந்தால் இருமல் நீங்கும்.

தாது விருத்திக்கு
வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து உண்டுவந்தால் தாது விருத்தியடையும்.

மலட்டுத்தன்மை நீங்க
சிலர் குழந்தையின்மையால் பல மன வேதனைக்க்கு ஆளாவர். இவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை
நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.

விதவிதமான வாழைகள் பயிரிடப்படுகின்றன. இவற்றில் மொந்தன், பாளையங்கோட்டை வகைகளின் வாழைப்பூ உண்பது சால சிறந்ததாகும். வாழைப்பூ வடை, கட்லெட், பக்கோடா என பலகாரங்களாகவும் செய்து உண்பதும் உகந்ததே.