Showing posts with label மண் சிகிச்சை. Show all posts
Showing posts with label மண் சிகிச்சை. Show all posts

மண் சிகிச்சை

மண் சிகிச்சை

மண் குளிர்ச்சி தன்மை உடையது. உலக ஜீவன்களின் உணவு ஆதாரம் மண் தன்மை & பொறுமையின் சிகரம். மண் தந்த வரங்களில் முதல் தரம் தாவரம். மண் & தாவம், தரம், வரம் & தவத்திற்கான இடம். மன அழுத்தம் மிகும் சமயம் இரத்த ஓட்டம் மூளை, தலை, நெற்றி கண் உறுப்புக்களுக்கு அதிகரிக்கிறது. மன உளைச்சல் மிகுதியாகிறது. வயிற்றின் ஜீரண மண்டலம் பாதிப்பு அடைகிறது. வயிற்றில் அமிலம் மிகுதிப்படுகிறது.
அச்சமயம் நெற்றியில் மண் பட்டியும் வயிற்றில் மண் பட்டியும் பூசி 20 நிமிடம் வரை ஓய்வு எடுக்கலாம். தண்ணீர் குடித்து இச்சிகிச்சையைச் செய்யலாம். நன்றாக ஓய்வு, உறக்கம், மன அமைதி கிட்டும். மன உளைச்சல் விலகும்.

இதுபோல் மண் குளிய்ல சிகிச்சையும் உண்டு. வாரம் ஒருமுறை எடுக்கலாம். வெயில் காலங்களில் மூன்று தினங்களுக்கு ஒருமுறை குளிக்கலாம்.கால்படாத 2 அடி ஆழத்தில் உள்ள வண்டல், செம்மண், களிமண் எடுத்து வெயிலில் உலர்த்தி சலித்து பயன்படுத்தலாம். அல்லது .. எனப்படும் புற்றுமண் (ரெடிமேட் மண்) உடனடியாக பயன்படுத்தும் தன்மையில் உள்ளது. ஒரு நபருக்கு மண் குளியலுக்கு ஒன்று முதல் இரண்டு கிலோ மண் வரை தேவைப்படும். நெற்றிப்பட்டி, வயிற்றுப்பட்டி, மூட்டுப் பட்டிகளுக்கு 250 கிராம் வரை தேவைப்படலாம்.

இரவு நீரில் ஊறவைத்து மறுநாள் பயன்படுத்தலாம். அல்லது நீரில் கரைத்து தோசைமாவுப் பதத்தில் பயன்படுத்தலாம்.மண் சிகிச்சைகளை கூடியவரை வெறும் வயிற்றில் செய்யவேண்டும். வெயில் நேரங்களில் பகலில், சூரிய கதிர்கள் இருக்கும் சமயம் செய்யலாம்.

கண் பகுதிகள் தவிர மற்ற உடல்கள் முழுவதும் ஈர மண்ணை தலை முதல் பாதம் வரை 10 மி.மீ அவு கனத்தில் பூமி அமரலாம். ஓய்வெடுக்கலாம்.நன்றாக காய்ந்து உலர விடவேண்டும் மண் நமது இயக்கத்தில் & இயந்திர செயல் & இரசாயனச் செயல் & வெப்ப செயல் & மனநிலை மாற்ற செயல் என நான்கு அற்புத வழிகளில் பணி புரிகிறது. உடல் கழிவுகளை கலைத்து வெளியேற்றுகிறது. இரத்தம் அமிலத்தன்மை குறைகிறது ஆகிறது. சுத்தமடைகிறது. குளிர்ச்சி தன்மை அடைவதால் தலைஅழுத்தம், மன அழுத்தம் மட்டுப்படுகிறது. உடலில் இரத்தத்தில் மனமாற்றம், வேதியில் மாற்றம், பிராண சக்தியை உயர்த்தும் காந்த அலைகள் உள் திசுக்களிலும் உருவாகி உந்தப்படுகிறது. உள் திசுக்களில் பொட்டாசியம் அதிகரித்து சோடியம் உப்புக்கள் குறைய ஆரம்பிக்கின்றன.

நமது இயக்கம் பாரா சிம்பதடிக் நரம்பு கண்ட்ரோலுக்கு வருகிறது. இயக்கம் இயல்பாகிறது. தெளிவான சிந்தனையும் கிட்டுகிறது.20 முதல் 30 நிமிடம் கழித்து காய்ந்த மண்ணை உதிர்த்து விட்டு நன்றாக நீரில் குளித்துவிடவேண்டும்.மண் குளியல் எடுத்த தினத்தில் குளிர்பானங்கள், தயிர், பிரிட்ஜ் தண்ணீர் போன்ற அதிகுளிர்ச்சி பானங்கள், உணவுகளைக் கண்டிப்பாக நிறுத்த வேண்டும்.

இயற்கை மருத்துவ முகாமில் அனைவரும் விரும்பும் சிகிச்சையில் ஒன்று மண் குளியல் சிகிச்சை, குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை குளிக்கலாம். நடை சென்றவர்கள், வெளியில் பயணம் சென்று வந்தபோது மன உளைச்சல், இரத்த ஓட்டம், அதிக அளவிலும் மனம் அலை பாய்ந்தும் இருக்கும். அச்சமயங்களில் குளிர்ந்த நீர் பாதக் குளியல் எடுக்கலாம்.ஒரு மரப்பெஞ்சு அல்லது மர ஸ்டூலில் அமர்ந்து இருகால்களையும் குளிர்ந்த நீர் உள்ள அகன்ற பாத்திரம், குண்டாவில் அமிழ்த்து வைக்கவும். முழங்கால் வரை நீர் இருக்கலாம். அச்சமயம் நல்ல இசை, தியானம், இணைக்கலாம். பஜன் செய்யலாம். பத்து முதல் இருபது நிமிடம் இருக்கலாம்.அல்லது இரண்டு முதல் மூன்று நிமிடம் மாறி மாறி மூன்று முறை செய்யலாம்.

மன அழுத்தம் விலகும். மனம் சாந்தி அடையும். கால் வலி குறையும் வெயில் காலங்களில் செய்வது நல்லது. பாத எரிச்சல் குடைச்சல் குறையும்.பார்க்கப் பசி போ மருந்து & தன்னைப் பாராதவர்களைச் சேரா மருந்து, கூர்க்கத் தெரிந்த மருந்து & அநுகூல மருந்தென்று கொண்ட மருந்து.