Showing posts with label செல்வ வளம் பெருகிட ஒரு சுலபமான பரிகாரம். Show all posts
Showing posts with label செல்வ வளம் பெருகிட ஒரு சுலபமான பரிகாரம். Show all posts

செல்வ வளம் பெருகிட ஒரு சுலபமான பரிகாரம்

செல்வ வளம் பெருகிட ஒரு சுலபமான பரிகாரம்!!!

ஒரு எலுமிச்சம்பழத்தில் வெள்ளிக்கிழமையன்று நயம் குங்குமத்தால் ஸ்வஸ்திக் சக்கரம் எழுதி திருவிளக்கு பாதத்தில் வைத்து வணங்கலாம்.ஒவ்வொரு வாரமும் ஒரு எலுமிச்சம்பழம் வைத்து வணங்கியபின் தனியாக எடுத்து வைக்கவும்.
ஒரு வருடம் ஆனதும் ஏதாவது ஒரு ஆற்றில் மொத்தமாக போட்டு 12 ரூபாய் நாணயங்களை தட்சிணையாக ஜலம் ஓடும் ஆற்றில் போடவும்.இதனாலும் செல்வ வளம்(தன ஆகர்ஷணம்) உண்டாகும்.இதுவும் செய்ய முடியாதவர்கள் மாப்பொடி,மஞ்சள்பொடி கொண்டு ஸ்வஸ்திக் கோலம் போடலாம்.
வெள்ளிக்கிழமைதோறும் மாலை 6 மணிக்குள் ஏதாவது ஒரு பசுமாட்டிற்கு 6 மொந்தன் பழம் கொடுத்துக்கொண்டே வரலாம்.இதனாலும் நம்முடைய பணக்கஷ்டம் தீரும்.
செல்வ வளம் பெருக!
செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது;அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள்,துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.
நமது வீட்டிற்குள் நுழைந்ததும்,எப்போதும் நறுமணம் வீச வேண்டும்.அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும்.எங்கோ போக வேண்டிய பணம்,நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும்.
ஒருபோதும் நாம் வாழும் வீட்டில் இல்லை;மாட்டேன்; நாசமாகப் போச்சு; முடியாது;விளங்காது = இதுமாதிரியான அவச்சொல்லை எப்போதுமே பேசக்கூடாது.குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மாலை 5மணி முதல் 7 மணி வரை இம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவது முற்றிலும் தவறு.
பிரதி வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து,அலசிவிட்டுவிட வேண்டும்.அலசியபின்னர், நமது வீட்டுப்பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும்.அதன் பிறகு,100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.
ஒருபோதும் இருட்டியபின்னர்,தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால்,எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான்.
குளிக்கும்போதும், தூங்கும் போதும் நிர்வாணமாக இருக்கக் கூடாது;அப்படி நிர்வாணமாக இருந்தாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.ஆணோ,பெண்ணோ சுய இன்பம் செய்யாமலிருப்பதும் அவசியம்.அடிக்கடி சுய இன்பம் செய்பவர்களின் வீடுகளிலிருந்து செல்வச் செழிப்பு தரும் கடவுளாகிய மகாலட்சுமி,புவனேஸ்வரி வெளியேறிவிட்டு,அவளின் மூத்த சகோதரியான மூதேவி வந்துவிடுவாள்.
எக்காரணம் கொண்டும் தம்பதியர் இரவில் வெட்டவெளியில் உடலுறவு கொள்ளக் கூடாது.அப்படி செய்தால்,யாராவது ஒருவரை சூட்சும சக்திகள் பிடிக்கும்.அதன் விளைவாக இருவரில் யாராவது ஒருவர் அளவற்ற காம வெறியை அடைந்துவிடுவர்.குடும்பங்கள் நாசமடைவதற்கான முதல் காரணம் இதுதான்.
ஒரு போதும் வீட்டில் பெண்கள் அழக்கூடாது.அவர்கள் அழுதால்,வீட்டில் செல்வ வளம் தங்காது.
கரடு முரடான ராக் இசை முதலான மேற்கத்திய இசையை வீட்டில் அதிகமான அலறலுடன் ஒலிக்க வைப்பதாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.மெல்லிய இசை(சினிமா பாட்டாக இருந்தாலும் சரி;கர்னாட இசையாக இருந்தாலும் சரி;மனோதத்துவ இசையாக இருந்தாலும் சரி)யை அடிக்கடி ஒலிக்கச் செய்வதன் மூலமாக செல்வ வளம் நம்மைத் தேடி வரும்.
மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் குப்பையை சேர்த்து வைத்தாலும் பண வரவு குறைந்துவிடும்.ஒரு ஆடையை இரண்டு தடவைக்கு மேல் அல்லது இரண்டு நாளுக்கு மேல் அடிக்கடி அணிந்தாலும் பண வரவு குறைந்துவிடும் என்பது அனுபவ உண்மை!
தினமும் வீட்டில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைத்து,பின் வருமாறு வழிபாடு செய்து வருவதால் நமது நீண்டகால கடன்கள் தீர்ந்துவிடும்;வராக்கடன் வசூலாகும்.பணம் மிச்சமாகும்.அதே சமயம்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு கைவிட வேண்டும்.