Showing posts with label பெண்களின் தாழ்வு மனப்பான்மை போக்க சில வழிகள் - Girl's Inferiority Complex. Show all posts
Showing posts with label பெண்களின் தாழ்வு மனப்பான்மை போக்க சில வழிகள் - Girl's Inferiority Complex. Show all posts

பெண்களின் தாழ்வு மனப்பான்மை போக்க சில வழிகள் - Girl's Inferiority Complex

பெண்களின் தாழ்வு மனப்பான்மை போக்க சில வழிகள் -
Girl's Inferiority Complex

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

தாழ்வு மனப்பான்மை தேவையற்றது. இது மனிதர்களை சோர்வடையச் செய்துவிடும். மேலும் அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளி வராமல் தடுத்துவிடும்.

1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான் நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்..

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள். இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும் அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித்தனமாய் முயற்சி செய்யுங்கள்..

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை…

5. உங்களுக்கு எதுவும் தெரியாது எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்… இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது..

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை. நிராகரித்தவருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்..