Showing posts with label ‪‎கடுக்காய்‬ ‪‎பொடி‬ : சர்வரோக‬ ‪‎நிவராணி‬:. Show all posts
Showing posts with label ‪‎கடுக்காய்‬ ‪‎பொடி‬ : சர்வரோக‬ ‪‎நிவராணி‬:. Show all posts

‪‎கடுக்காய்‬ ‪‎பொடி‬ : சர்வரோக‬ ‪‎நிவராணி‬:

‪#‎கடுக்காய்‬ ‪#‎பொடி‬ : சர்வ ‪#‎ரோக‬ ‪#‎நிவராணி‬:

----------------------------------------
நோயற்ற வாழ்வு வாழவும், உடலினை உறுதி செய்யவும் இயற்கை நமக்கு பல்வேறு வளங்களை வழங்கியுள்ளது.
நமது உடலை வலிமையுறச் செய்வதில் கடுக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. கடுக்காய் மரம் 4000 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது புராணங்களிலும் இம்மரத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தாயகம் இந்தியா தான்.
தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை அருந்தும் போது ஒரு துளி அமிர்தம் சிந்தியது. அத்துளி பூமியில் விழுந்து கடுக்காய் மரமாக உருவெடுத்தது என புராணங்கள் தெரிவிக்கின்றன.
#கடுக்காய் ‪#‎பொடியின்‬ ‪#‎பயன்கள்‬:
------------------------------
1. இரத்தத்தை சுத்திகரிக்கிறது.
2. பிராண வாயு அதிகரிக்கிறது.
3. வாய் மற்றும்குடல் புண்களை ஆற்றும்
4. இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 300 மடங்கு அதிகமாகிறது. ( 300% ஆக்சிஜன் = 2 மணி நேரம் பிராண யாமம்)
5. மலசிக்கலை நீங்குகிறது.
6. இது ஒட்டு மொத்த வயிற்றயுமே சுத்தம் செய்கிறது.
7. இளமையாக வைத்திருக்கும்.
8. வாழ்நாளை அதிகரிக்கிறது.
9. வாய் துர்நாற்றம் அகலும்.
10. எதிர்மறையான எண்ண பதிவுகளை அகற்றும்.
‪#‎எடுத்துக்‬ கொள்ளும் முறை:
----------------------------
தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் 1 ஸ்பூன் கடுக்காய் பொடியுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குடித்து வர வேண்டும்.
" காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம்
உண்டால்
விருத்தனும் பாலனாமே."
காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாகும். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வரப் பழகிக் கொள்ளுங்கள்.
எனவே, கடுக்காய் உங்கள் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷ மாகும்.
கடுக்காய் திருமூலரின் ஆசி பெற்றது. நாமும் அதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், இந்த உடல் பெற்ற உபாயம் அறிவோம்.