Showing posts with label பெண்களை அதிகம் பாதிக்கும் PCOS பிரச்சனைக்கான காரணங்கள். Show all posts
Showing posts with label பெண்களை அதிகம் பாதிக்கும் PCOS பிரச்சனைக்கான காரணங்கள். Show all posts

பெண்களை அதிகம் பாதிக்கும் PCOS பிரச்சனைக்கான காரணங்கள்

பெண்களை அதிகம் பாதிக்கும் PCOS பிரச்சனைக்கான காரணங்கள்


       தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


சினைப்பை நீர்க்கட்டி ஒரு பெண்ணின் டீன்-ஏஜ் பருவத்திலேயே தொடங்கும் அபாயமும் அதிகரித்து வருகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

இருக்கும். இதன் எதிரொலியாக முறையற்ற மாதவிடாய் சுழற்சி, தேவையற்ற இடங்களில் ரோம வளர்ச்சி மற்றும் முகப்பரு போன்றவை ஏற்படுகிறது. இந்த சினைப்பை நீர்க்கட்டி ஒரு பெண்ணின் டீன்-ஏஜ் பருவத்திலேயே தொடங்கும் அபாயமும் அதிகரித்து வருகிறது.

PCOS சில அறிகுறிகள்:

* முறையற்ற மாதவிடாய் சுழற்சி (45 நாட்கள் அல்லது அதற்கும் மேல் மாதவிடாய் இல்லாமல் இருப்பது அல்லது ஒரு வருடத்தில் 8 முறைக்கும் குறைவாக மாதவிடாய் சுழற்சி)

* சினைப்பை சற்று பெரிதாக (தொகுதி பெரும்பாலும் (>10cc) காணப்படும் மற்றும் பல சிறிய கட்டிகள் இருக்கலாம். அல்ட்ரா சவுண்ட் மூலம் இதை அறியலாம்.

* முகம் அல்லது உடலின் மற்ற பகுதிகளில் அதிக ரோம வளர்ச்சி

* முகப்பரு

* எடை அதிகரித்தல் (முக்கியமாக வயிற்றுப் பகுதியில்) மேலும் எடை குறைப்பதில் கடினம்.

* கழுத்து மற்றும் பிற பகுதிகளில் கருந்திட்டுகள் ஏற்படுவது (dark skin patches).

* இடுப்பு வலியோடு மன அழுத்தம்.

மேலே குறிப்பிட்டுள்ளவற்றில் சில அறிகுறிகளோ அல்லது அனைத்து அறிகுறிகளும் இருந்தால், PCOS பாதிப்பு இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.


PCOS எதனால் ஏற்படுகிறது?

PCOS என்பது சினைப்பை மற்றும் மூளைப் பகுதியில் இருக்கும் ஹார்மோன்களின் சமநிலையின்மையால் ஏற்படுகிறது. குறிப்பாக, பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் Luteinizing hormone அல்லது கணையத்தில் இருந்து சுரக்கும் இன்சுலின் சராசரி அளவை விட அதிகமாக இருப்பின் அது சினைப் பையில் அதிக அளவு டெஸ்டோஸ்டிரோன் என்கிற ஆண் ஹார்மோன்கள் சுரக்க காரணமாகிறது.

மரபணுக்களும் கூட இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. அம்மாவுக்கோ அல்லது சகோதரிக்கோ PCOS இருந்தால் அந்தக் குடும்பத்தில் மற்றவருக்கும் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். PCOS-க்கு சிகிச்சை பொதுவாக PCOS-க்கு கருத்தடை மாத்திரைகள், ஹார்மோன் சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம். உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது மிக அவசியமானது.

* ஹார்மோன் சமநிலைபடுத்துதல்

* டெஸ்டோஸ்டிரோன் அளவை குறைத்தல்.

* மாதவிடாய் முறைப்படுத்துதல்

* உங்கள் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல்.

* உடல் எடையைக் குறைத்தல் ஆயிவற்றை பரிந்துரை செய்வார்கள்.