Showing posts with label பாரம்பரிய விளையாட்டுகள். Show all posts
Showing posts with label பாரம்பரிய விளையாட்டுகள். Show all posts

பாரம்பரிய விளையாட்டுகள்

இன்றைய குழந்தைகள் அனுபவிக்காத இன்பம்...மலரும் நினைவுகள்...!!!



பாரம்பரிய விளையாட்டுகள்.....!!!

ஏற்றமும்... இறக்கமும்... உள்ளது வாழ்க்கை.... என உணர்த்தியது
*பரமபதம்*
எண்ணிக்கையில் கூட்டலையும்... பெருக்கலையும்... விளையாட்டாய் கத்துகொடுத்தது
*கிட்டிபுள்*
வெட்டி வெளியில் எறிந்தாலும்... மீண்டு(ம்) தொடக்கத்திலிருந்து துவங்கி இலக்கையடைய சொல்லிகொடுத்தது
*தாயம்*
அடுக்கியது சரித்து... மீண்டும் அடுக்கி அழித்தலும் ஆக்கமும் நம்முள்ளுண்டு... என உணர்த்தியது
*ஏழுகல்*
வேறு வழியில்லை என்றநிலை வரும்வரை போராடு... என பொட்டில் செதுக்கியது
*சதுரங்கம்*
ஒளிந்தவர்களைக் கண்டுபிடிக்கும் பொறுமையும்... ஒளிந்து தனிமைநேரப் பெருமையையும்.. பெற்றுதந்தது
*ஐஸ்பால்*
சமமாக இல்லாது ஊனமாக இருந்தாலும் சாதிக்கனும் எனநெறி ஊட்டியது
*நொண்டி*
இருக்குமிடத்தில் எடுத்து... இல்லாவிடத்தில் நிரப்பும் குணம்... மனம் பதித்தது
*பல்லாங்குழி*
நண்பன் உயரம்போக முதுகும்.... தோளும்.... குனிந்து ... பணிந்து நிற்க சொல்லிக் கொடுத்தது
*பச்சைகுதிரை*
அதனால் தானோ என்னவோ அந்தகாலத்தில் தற்கொலைகள் அவ்வளவாக இருந்ததில்லை