Showing posts with label வெந்தயம் ஃபேஸ் பேக். Show all posts
Showing posts with label வெந்தயம் ஃபேஸ் பேக். Show all posts

வெந்தயம் ஃபேஸ் பேக்

சரும பிரச்சனைகளை தீர்க்கும் வெந்தயம் ஃபேஸ் பேக்!!!

வெந்தயத்தைக் கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், இதனைக் கொண்டு சருமத்தை எளிதில் பராமரிக்கலாம்.

* வெந்தயம் சிறந்த கிளின்சராகவும் செயல்படும். தினமும் வெந்தயத்தை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக 15 நிமிடம மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கள் அனைத்தும் நீங்கி, சருமம் சுத்தமாக இருக்கும். இதனை தினமும் செய்து வரலாம்.