Showing posts with label வாதம். Show all posts
Showing posts with label வாதம். Show all posts

பித்தம், வாதம், கபம் நீக்கும் வேப்பம் பூக்கள்

பித்தம், வாதம், கபம் நீக்கும் வேப்பம் பூக்கள்!!!

பூக்கள்வேப்பமரத்தின் இலைகளும், பூக்களும், கனிகளும் மருத்துவகுணம் மிக்கவையே. வேப்பம்பட்டை, நீரிழிவுக்கு சிறந்த மருந்து. பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்று நோய்களையும் சமன்படுத்த வேப்பம்பூ பயன்படுகிறது. ஒரு கைப்பிடியளவு வேப்பம்பூவை எடுத்து உலர்த்தி பொடி செய்து கால் டம்ளர் நீரில் சிறிது தூளைக் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம், வாதம், கபம் சமனப்படும்.

வேப்பம்பூவை நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு வற்றல்குழம்பு, மிளகுரசம் தயார் செய்யும்போது சிறிது வேப்பம்பூவைச் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர வயிறு உப்பிசம்,பித்தம், வாதம் தொடர்புடைய நோய்கள் நீங்கும். கல்லீசரல் பாதுகாக்கப்படும். வேப்பம்பூ பொடியில் தேன் கலந்து தினம் 2 வேளை வீதம் மூன்று நாட்கள் உட்கொண்டு வந்தால் பித்தம் காரணமாக ஏற்படும் வாய்க்கசப்பு, வாந்தி, மயக்கம், போன்ற தொல்லைகள் நீங்கும்.

உலர்ந்த வேப்பம்பூவை கறிவேப்பிலையோடு துவையலாக்கி சாப்பிட, பித்தம் தொடர்பான சகல பிணிகளும் நிவர்த்தியாகும். வேப்பம்பூவை தண்ணீரில் ஊறவைத்து அதனை குடித்து வர உடல் பருமன் குறையும். இது அல்சரையும் குணமாக்கும். உடலை வலுவாக்குவதில் வேப்பம்பூக்களின் பங்கு முக்கியமானது.
வேப்பம்பூவை பறித்து வந்து அதை கொதிக்கும் நீரில் போட்டு அதிலிருந்து வரும் ஆவியை காது வலியாக உட்செல்லும்படி தலையை வைத்திருந்தால் காதுவலி, காது இரைச்சல், சீழ் வடிதல், யாவும் நீங்கி காது நன்கு கேட்கும். வேப்பம்பூ கஷாயத்தை சிறிதளவு காலையிலும், மாலையிலும் குடிக்கச் செய்தால் குழந்தைகளின் வயிற்றுக் கோளாறுகள் அகன்று வயிறு சுத்தப்படும்.