Showing posts with label 30 பேரில் ஒருவர் மரணமடைய நேரிடுகிறது. Show all posts
Showing posts with label 30 பேரில் ஒருவர் மரணமடைய நேரிடுகிறது. Show all posts

பதப்படுத்தப்பட்ட இறைச்சி உண்பதால், 30 பேரில் ஒருவர் மரணமடைய நேரிடுகிறது

மிகவும் அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பது அகால மரணத்துக்கு இட்டுச் செல்லக் கூடும் என்பதைக் காட்டும் கூடுதல் ஆதாரம் வெளிவந்துள்ளது.

இதை அனைத்து நண்பர்களும் பகிரவும்.

ஐரோப்பாவில் சுமார் ஐந்து லட்சம் மக்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வொன்று, பதப்படுத்தப்பட்ட இறைச்சி உண்பதால், 30 பேரில் ஒருவர் அகால மரணமடைய நேரிடுகிறது என்று கூறியது. பி.எம்.சி மெடிசின் என்ற சஞ்சிகையில் வெளியாகியிருக்கும் ஒரு கட்டுரையில், ஆராய்ச்சியாளர்கள், தினசரி 20 கிராம்கள் இறைச்சி என்ற அளவுக்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சி உண்பதைக் கட்டுப்படுத்துவது, ஓராண்டில் பல ஆயிரம் மரணங்களைத் தடுக்கக் கூடும் என்று கூறியிருக்கின்றனர்.

பதப்படுத்தபட்ட இறைச்சிகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் உப்பு மற்றும் ரசாயனப் பொருட்கள் இருதயக்குழாய் நோய்கள் மற்றும் புற்று நோய்கள் ஏற்படும் ஆபத்தை அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.