Showing posts with label தாங்க முடியாத வறட்டு இருமலா?. Show all posts
Showing posts with label தாங்க முடியாத வறட்டு இருமலா?. Show all posts

தாங்க முடியாத வறட்டு இருமலா?

தாங்க முடியாத வறட்டு இருமலா? இதோ மருத்துவம்!!!

வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் மூலம் எளிதாக சில சித்த மருந்துகளை தயாரிக்கலாம்.

1. ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு இரண்டு லவங்கம் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
2. சுக்கு, வால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்றாக வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.
3. தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து நன்றாக சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும்.
4. ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.
5. வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் கலந்து குடித்தால் வயிற்று வலி நீங்கும்.
6. செம்பருத்தி இலைகளை பொடியாக்கி தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
7. சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவற்றை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
8. கருணைக்கிழங்கை பொடியாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.
9. எலுமிச்சம்பழச்சாறை தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.