Showing posts with label yoga-for-early-ejaculation. Show all posts
Showing posts with label yoga-for-early-ejaculation. Show all posts

விந்தணு பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆண்களுக்கான ஆசனங்கள் - yoga-for-early-ejaculation

 விந்தணு பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆண்களுக்கான ஆசனங்கள் - yoga-for-early-ejaculation

விந்தணு பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆண்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஆசனங்கள் நிரந்தர தீர்வை தரும். மேலும், விந்து விரைவில் வெளியேறுவதை தடுக்கும்.

விந்தணு பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆண்களுக்கான ஆசனங்கள் - yoga-for-early-ejaculation
விந்தணு பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆண்களுக்கான ஆசனங்கள் - yoga-for-early-ejaculation
விந்தணு பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆண்களுக்கான ஆசனங்கள் - yoga-for-early-ejaculation

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753

விந்தணு பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆண்களுக்கான ஆசனங்கள்

இன்று பல ஆண்கள் பல வித பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர். நோய்களின் தாக்கமும் முன்பை விட இப்போதெல்லாம் அதிகம் ஆகி கொண்டே இருக்கிறது. அந்த வகையில் ஆண்களின் பெரும் பிரச்சினையாக கருதப்படுவது விந்தணு குறைபாடு, ஆண்மை குறைபாடு, முன்கூட்டியே விந்து வெளியேற்றம், மலட்டு தன்மை போன்றவை இவற்றில் அடங்கும். இந்த பதிவில் முன்கூட்டியே விந்தணு வெளியேறுவதை தடுக்கும் சில முதன்மையான யோகா முறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

புஜங்காசனம்

இந்த பயிற்சி ஆண்களின் பெரும்பாலான பிரச்சினைகளை விரைவில் குணப்படுத்த கூடியது. உடலின் தசைகளை இலகுவாக்கி ஆண்களின் குறைபாடுகளை முற்றிலுமாக நீக்கி விடக்கூடியது. அத்துடன் பிறப்புறுப்பில் அதிக பலத்தை இது ஏற்படுத்தும். மேலும், இல்லற வாழ்வில் ஈடுபட, ஆற்றலை அதிகரிக்க செய்யும்.

இந்த பயிற்சியை செய்வதற்கு முதலில் குப்புற படுத்து கொள்ளவும். அடுத்து இரண்டு கைகளையும் தோள்பட்டைக்கு நேராக வைத்து கொண்டு தலை மற்றும் மார்பு பகுதியையும் சேர்த்து மேலே தூக்கி மூச்சை இழுத்து விடவும். அடுத்து இரு கால்களையும் மேலே தூக்கி மூச்சை இழுத்து விடவும். இவ்வாறு, தலையையும் காலையும் ஒரே நேரத்தில் தூக்கி மூச்சை இழுத்து விட்டால், முன்கூட்டியே விந்து வெளியேறுவதை தடுக்கலாம்.

பாத கோணாசனம்

ஆண்களுக்கு இந்த ஆசனம் ஒரு சிறந்த வர பிரசாதம். மேலும், உடலின் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி இல்லற வாழ்வை இனிமையாக்கும். அத்துடன் விந்தணுவின் ஆரோக்கியத்தை கூட்டும்.

முதலில் இரு கால்களையும் நன்றாக நீட்டி உட்கார்ந்து கொள்ளவும். அடுத்து வலது காலை மடக்கி வைத்து கொள்ளவும். அதே போன்று இடது காலையும் மடக்கி வைத்து கொள்ளவும். இரு கால்களும் ஒன்றாக இருக்கும் படி பார்த்து கொள்ள வேண்டும். அடுத்து கை விரல்களை சேர்த்து பாதத்திற்கு அடியில் வைத்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் முதுகு எலும்பு நேராக இருக்க வேண்டும். இந்த ஆசனத்தில் 30 நொடிகள் இருக்கவும். அடுத்து நெற்றியை தரையில் வைக்கவும். மெதுவாக மூச்சை இழுத்து கொண்டு ஆரம்ப நிலையில் வர வேண்டும்.

மச்சியாசனம்

இந்த பயிற்சி முறை கிட்டத்தட்ட மீனை போன்ற தோற்றம் கொண்டது. இவை தசைகளை வலுப்படுத்தி அதிக ஆற்றலை தர கூடியதாம். குறிப்பாக விந்தணு பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆண்களுக்கு இவை நிரந்தர தீர்வை தரும். மேலும், விந்து விரைவில் வெளியேறுவதை தடுக்கும்.

முதலில் பத்மாசனத்தில் அமர வேண்டும். அடுத்து, வலது காலை இடது தொடையிலும் இடது காலை வலது தொடையிலும் வைத்து கொள்ள வேண்டும். பின், முழங்கைகளை பின்னால் எடுத்து சென்று மேல் நோக்கி, படுத்து கொள்ள வேண்டும். அதன்பிறகு, உடம்பின் மேற்பகுதியை தூக்கி தலையின் உச்சியை தரையில் வைக்க வேண்டும். இறுதியாக பழைய நிலையில் வர வேண்டும்.

தனுராசனம்

இந்த ஆசனம் ஆண்களின் விந்தணுவின் ஆற்றலை அதிகரித்து, முன்கூட்டியே இவை வெளியேறுவதை தடுக்கும்.

இந்த ஆசன பயிற்சியை செய்ய முதலில் குப்பற படுக்க வேண்டும். அடுத்து இரண்டு கணுக்காலை கைகளால் பிடித்து கொண்டு, நெஞ்சை மேல் நோக்கி தூக்க வேண்டும். இந்த நிலையில் மூச்சை இழுத்து வெளியில் விடவும். இவ்வாறு, வில்லை போன்று உங்கள் உடலை வளைத்து தொடர்ந்து காலை வேளையில் செய்து வந்தால் விந்துவின் நலன் பெருகும்.

சக்கராசனம்

சற்றே கடினமான ஆசன முறை, என்றாலும் இது எண்ணற்ற பலன்களை தர கூடியது. இவை விந்தணுவின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், தைராய்டு பிரச்சினைக்கும் சேர்த்தே தீர்வு தருகிறது. உடலின் மெட்டபாலிசத்தை செம்மைப்படுத்த இந்த பயிற்சி முறை மிகவும் உதவுகிறது.

முதலில் முதுகு பகுதி தரையில் படுவது போல படுத்து கொள்ளவும். அடுத்து, உள்ளங்கை தரையை தொடுவது போல வைத்து கொள்ளவும். இந்த நிலையில் மூச்சை உள்ளே இழுத்து கொண்டு, உங்கள் முழு உடலையும் மேலே உயர்த்த வேண்டும். குறிப்பாக கழுத்து பகுதியையும், கால் பகுதியையும் இரு கைகளின் உதவியோடு கால்களை மேலே முடிந்த வரை உயர்த்தவும். பிறகு மூச்சை மெல்லமாக விடவும். இவ்வாறு செய்து வந்தால் ஆண்களின் இல்லற வாழ்வு இன்பம் பெரும்.