Showing posts with label அல்சரைக் குறைக்க எளிய வீட்டு மருத்துவம். Show all posts
Showing posts with label அல்சரைக் குறைக்க எளிய வீட்டு மருத்துவம். Show all posts

அல்சரைக் குறைக்க எளிய வீட்டு மருத்துவம்

அல்சரைக் குறைக்க எளிய வீட்டு மருத்துவம்!

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவதிப்படும் பிரச்னைகளில் ஒன்று தான் அல்சர் புண். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாதே இதற்கு மிகப்பெரிய மூலகாரணமாகும்.

சரியான நேரத்தில் சாப்பிடாத போது, இரைப்பையில் அமிலம் சுரந்து புண்களை உண்டாக்குகிறது. இதனால் கடுமையான வயிற்றுவலி ஏற்படும். தொடக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால் கடுமையான பின்விளைவுகளையும் சந்திக்க நேரிடும்.

இப்பிரச்சனையை மருந்துகளை உட்கொள்வதை விட மிக எளிமையான வீட்டு வைத்தியத்தின் மூலம் சரிசெய்யலாம்.

* தினமும் ஆப்பிள் ஜூஸ், அகத்திக் கீரை சாறு, பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தாலும் அல்சர் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

* நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து குடித்து வந்தாலும் நிவாரணம் கிடைக்கும்.

* தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனை ஊற்றி குடித்தாலும் அல்சரால் ஏற்படும் வயிற்று எரிச்சல் பிரச்சனை சரியாகும்.

* பாக்டீரியா எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ள வெள்ளைப்பூண்டை தேன் கலந்து சாப்பிட்டாலும் அல்சர் சரியாகும்.

* வெந்தயம் கலந்த டீ, கற்றாழை ஜூஸ் இதற்கு ஒரு நல்ல தீர்வாகும், குறிப்பாக அதிகளவு தண்ணீர் பருகுவதே சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.

* தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டு வர வயிற்றுப் புண் சரியாகும்.

* முட்டைகோஸ், பாகற்காய் மற்றும் முருங்கைகாயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் அல்சர் சரியாகும்

* காலையில் பால் மற்றும் வெண்ணெய் சாப்பிட்டால் வலி குறைய வாய்ப்புண்டு.