Showing posts with label யாரையும் எப்பொழும் சனியே என்று திட்டாதீர்கள். Show all posts
Showing posts with label யாரையும் எப்பொழும் சனியே என்று திட்டாதீர்கள். Show all posts

யாரையும் எப்பொழும் சனியே என்று திட்டாதீர்கள்

யாரையும் எப்பொழும் சனியே என்று திட்டாதீர்கள்

யாரையும் எப்பொழும் சனியே என்று திட்டக்கூடாது என்பதற்கு ஒரு காரணம் உள்ளது. அது என்னவென்று பாருங்கள்.

சனீஸ்வரன் மந்த கதியுள்ளவர் என்பது இயற்கையான விதி. இந்தக் கிரகம் மற்ற கிரகங்களை விடசூரியனை மெதுவாகவே சுற்றும் என்பதால், அறிவியல் ரீதியாக இவ்வாறு சொல்வதுண்டு.

வீட்டில் கூட குழந்தை சரியாகப் படிக்கவில்லை என்றால், ஏன் மந்தமாக இருக்கிறாய்? என கேட்பதுண்டு. மந்தகதி உள்ளவர்களுக்காக சனீஸ்வரனுக்கு அர்ச்சனை செய்யலாம்.

ஆனால் சனியே என திட்டக்கூடாது. இவ்வாறு திட்டினால், யார்  திட்டுகிறாரோ, அவர் தன்னைக் கேலி செய்ததாகக் கருதி, சனீஸ்வரன் அவர் மீதும் தன் பார்வையை செலுத்தி விடுவார் என்பது ஐதீகம். மந்தகதி உடையவர்களிடம் பக்குவமாக பேசி திருத்துபவர்களுக்கு, சனீஸ்வரனின் அருள் கிடைக்கும்.