Showing posts with label தட்டையான வயிற்றைப் பெற உதவும் டாப் 5 உணவுகள்!. Show all posts
Showing posts with label தட்டையான வயிற்றைப் பெற உதவும் டாப் 5 உணவுகள்!. Show all posts

தட்டையான வயிற்றைப் பெற உதவும் டாப் 5 உணவுகள்!

தட்டையான வயிற்றைப் பெற உதவும் டாப் 5 உணவுகள்!

ஒவ்வொருவருக்குமே தொப்பை இல்லாத தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் நம்மைச் சுற்றியுள்ள ஃபாஸ்ட் புட், ஜங்க் உணவுகளினால் இந்த ஆசை வெறும் கனவாகவே மாறிவிடுகிறது. இருப்பினும் நம் வாய்க்கு பூட்டு போட்டு, சரியான டயட் மற்றும் அன்றாட உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், நிச்சயம் தொப்பையைக் கரைத்து தட்டையான வயிற்றைப் பெறலாம். தட்டையான வயிற்றைப் பெற டயட்டில் ஒருசில உணவுப் பொருட்களை சேர்க்க வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் சீராக பராமரிக்கப்பட்டு, தொப்பை சுருங்கி தட்டையாகும்.
ஒவ்வொருவருக்குமே தொப்பை இல்லாத தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் நம்மைச் சுற்றியுள்ள ஃபாஸ்ட் புட், ஜங்க் உணவுகளினால் இந்த ஆசை வெறும் கனவாகவே மாறிவிடுகிறது. இருப்பினும் நம் வாய்க்கு பூட்டு போட்டு, சரியான டயட் மற்றும் அன்றாட உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், நிச்சயம் தொப்பையைக் கரைத்து தட்டையான வயிற்றைப் பெறலாம்.
தட்டையான வயிற்றைப் பெற டயட்டில் ஒருசில உணவுப் பொருட்களை சேர்க்க வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் சீராக பராமரிக்கப்பட்டு, தொப்பை சுருங்கி தட்டையான வயிற்றை விரைவில் பெறலாம். சரி, இப்போது அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.
பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்
தசைகளின் சீரான வளர்ச்சிக்கும், கொழுப்புக்களைக் கரைக்கவும் பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் மிகவும் உதவியாக இருக்கும்.
பாதாம்
பாதாமில் புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின் ஈ மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. ஆகவே டயட்டில் இருப்போர், ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாமை உட்கொண்டு வர பசியுணர்வு குறைந்து, அடிக்கடி எதையாவது சாப்பிட வேண்டுமென்ற எண்ணம் நீங்கும்.
சிவப்பு குடைமிளகாய்
குடைமிளகாயில் வைட்டமின் சி ஏராளமாக நிறைந்துள்ளது. இது கொழுப்புக்களை கரைக்கத் தேவையான ஓர் ஊட்டச்சத்து. மேலும் இதில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் லைகோபைன் உடல் எடை குறைய உதவுவதாக ஆய்வுகளும் கூறுகின்றன
பசலைக்கீரை
ஆராய்ச்சியில் பச்சை இலைக் காய்கறிகளான கீரைகளை உட்கொண்டால் அடிக்கடி ஏற்படும் பசியுணர்வு குறைந்து, கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறைந்து விரைவில் தொப்பை மற்றும் எடையைக் குறைக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது.
ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று சொல்வார்கள். ஏனெனில் அந்த அளவில் ஆப்பிளில் சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக ஆப்பிளில் கலோரிகள் குறைவு ஆனால் பசியுணர்வைத் தடுக்கும் நார்ச்சத்து அதிகம். எனவே இதனை தினமும் ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் தொப்பையைக் குறைக்கலாம்.