Showing posts with label பித்ரு தர்ப்பணம் ஏன் செய்ய வேண்டும். Show all posts
Showing posts with label பித்ரு தர்ப்பணம் ஏன் செய்ய வேண்டும். Show all posts

பித்ரு தர்ப்பணம் ஏன் செய்ய வேண்டும்

பித்ரு தர்ப்பணம் ஏன் செய்ய வேண்டும்
pitru-tharpanam


      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும், அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.

சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அமாவாசை திதியை ‘பித்ரு திதி’ என்று கூறி, அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர்களின் பசியும் தாகமும் விலகி, அவர்கள் நமக்கு ஆசி வழங்குவார்கள்.

அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும், அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு செல்வார்கள் என்றும், அதுவே தோஷமாக மாறும் என்றும் சொல்லப் படுகிறது.

வீட்டில் பசியால் வாடும் தனது பெற்றோருக்கு உணவளிக்காமல், தெய்வத்திற்கு படையல் போட்டு நைவேத்தியம் செய்தாலும், ஆடை இன்றி தாய் தந்தையர் கஷ்டப்படும் போது, தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரம் அணிவிப்பதாலும் பலன் கிடைக்காது. பித்ரு தோஷம் தான் வந்து சேரும்.

தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில், சிரார்த்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டில் மங்கல நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைப்பது நல்லது.

மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிரார்த்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது. ஆகவே தவறாது சிரார்த்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும்.

ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் 96 நாட்கள். இவைகளில் மன்வாதி நாட்கள்-14, யுகாதி நாட்கள் - 4, மாதப்பிறப்பு நாட்கள் - 12, அமாவாசை - 12, மகாளய பட்சம் - 16, வ்யதீபாதம்- 12, வைத்ருதி - 12, அஷ்டகா -4, அன்வஷ்டகா - 4, பூர்வேத்யு- 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். இந்த 96 நாட்களை விட, சிரார்த்தம் செய்ய மிக மிக உத்தமமான நாள் தாய், தந்தையரின் திதி நாள் தான்.

துவாதியை விட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு சிரார்த்தம் செய்யும் நாட்களும் மிகவும் புண்ணியங்களைத் தரும். ஆகவே அதிக புண்ணியங்களைத் தரும் தந்தையரின் சிரார்த்தத்தை எக்காரணம் கொண்டும் செய்யாமல் விட்டு விடக்கூடாது.

ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிரார்த்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாகச் சென்றடையும்.