Showing posts with label மூளையின்(Brain-health) - ஆரோக்கியத்திற்கான உணவுகள். Show all posts
Showing posts with label மூளையின்(Brain-health) - ஆரோக்கியத்திற்கான உணவுகள். Show all posts

மூளையின்(Brain-health) - ஆரோக்கியத்திற்கான உணவுகள்

மூளையின்(Brain-health) - ஆரோக்கியத்திற்கான உணவுகள்
Diet-for-brain-health

           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


மூளையின் ஆரோக்கியத்திற்கும், சுறுசுறுப்பான செயல்பாட்டிற்கும் எந்த வகையான உணவுகளை சாப்பிடுவது மூளைக்கு நலம் சேர்க்கும் என்பது பற்றி பார்ப்போம்.

மூளையின் ஆரோக்கியத்திற்கும், சுறுசுறுப்பான செயல்பாட்டிற்கும் தேவையான உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அவைகளை சரியான நேரத்தில் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதும் அவசியமானது. எந்தெந்த நேரத்தில் எந்த வகையான உணவுகளை சாப்பிடுவது மூளைக்கு நலம் சேர்க்கும் என்பது பற்றி பார்ப்போம்.

காலையில் எழுந்ததும் டீயோ, காபியோ பருகுவதற்கு முன்பாக லவங்கப்பட்டை கலந்த பானம் பருகுவது நல்லது. அதிலிருக்கும் வேதியியல் பொருட்கள் பெருமூளையின் சீரான இயக்கத்திற்கும், ரத்த ஓட்டத்திற்கும் வழிவகை செய்கின்றன. லவங்கத்தை பொடி செய்து எலுமிச்சை சாறு மற்றும் சூடான நீரில் கலந்தும் பருகலாம். தினமும் காலையில் இதனை பருகுவதன் மூலம் சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்தும் விடுபடலாம்.

காலை உணவுடன் முட்டையை அவித்தோ, ஆம்லேட்டாக தயார் செய்தோ சாப்பிடலாம். முட்டையில் இருக்கும் வைட்டமின் பி, கோலின் போன்றவை நினைவாற்றல், மனநலத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டவை. தினமும் காலை உணவுடன் முட்டையை சேர்க்கும்போது திருப்தியாக சாப்பிட்ட மன நிறைவு கிடைக்கிறது. மதியம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும் உதவுகிறது.

மதிய உணவில் கட்டாயம் தயிர் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதில் அமினோ அமில டைரோசின் உள்ளடங்கி இருக்கிறது. அது டோபமைன் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. மூளையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்க டோபமைன் துணைபுரிகிறது. மேலும் தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் குடலுக்கு நலம் சேர்க்கிறது. மதியம் சாப்பிட்டபிறகு மந்தமான உணர்வு ஏற்படுவதையும் தவிர்க்கும்.

மாலை வேளையில் வால்நெட் சாப்பிடுவது மூளைக்கு நல்லது. அதிலிருக்கும் ஆன்டிஆக்சிடெண்ட் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அறிவாற்றல் திறனை அதிகரிக்கும். நினைவாற்றலும் மேம்படும். தினமும் 7 வால்ெநட்டுகள் சாப்பிட வேண்டும்.