Showing posts with label கடலை எண்ணெய் அதிக ஆற்றல் தரக்கூடியது. Show all posts
Showing posts with label கடலை எண்ணெய் அதிக ஆற்றல் தரக்கூடியது. Show all posts

கடலை எண்ணெய் அதிக ஆற்றல் தரக்கூடியது

சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படும் கடலை எண்ணெய் பல்வேறு அத்தியாவசிய சத்துக்களைத் தன்னகத்தே அடக்கி உள்ளது.
கடலை எண்ணெய் அதிக ஆற்றல் தரக்கூடியது

* நிலக்கடலை என வழக்கு மொழியில் வழங்கப்படும் வேர்க்கடலை மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது. தற்போது வெப்பமண்டல பகுதிகளான சீனா, இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா பகுதிகளில் முக்கிய எண்ணெய் வித்துப் பயிராக பயிரிடப்படுகிறது. இதன் பருப்புகளில் இருந்து கடலை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.

* கடலை எண்ணெய் அதிக ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடலை எண்ணெயில் உடலுக்கு 884 கலோரிகள் ஆற்றல் கிடைக்கிறது.

* அதிக அளவில் லிப்பிடுகள் நிறைந்தது. பூரிதமான கொழுப்புகள் உடலில் சேரவும், கெட்ட கொழுப்பான கொலஸ்டிரால் உடலில் சேராமல் காக்கவும் இவை உதவும்.

* 'ஒமேகா 6' எனப்படும் கொழுப்பு அமிலம் நிறைந்த சமையல் எண்ணெய், கடலை எண்ணெய்.

* 'பீட்டா சிட்டோஸ்டிரால்' எனும் துணை ரசாயன பொருள் கடலை எண்ணெயில் உள்ளது. இதுகொலஸ் டிராலை உறிஞ்சி அகற்றும் தன்மை கொண்டது. எனவே இதனை தினமும் 0.8 கிராம் உடலில் சேர்த்து வந்தால்இதய நோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

* 'ரெசவராடால்' எனும் நோய் எதிர்ப்பு பொருள் கடலை எண்ணையில் காணப்படுகிறது. இது இதய வியாதிகள், புற்றுநோய்க்கு எதிராக செயலாற்றும் தன்மை கொண்டது. நோய்த் தொற்றுகளை தடுப்பதிலும் மற்றும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் ஏற்படாமல் காப்பதிலும் பங்கு வகிக்கிறது.

* கடலை எண்ணெயில்'வைட்டமின்-இ'மிகுந்துள்ளது. 100 கிராம் எண்ணெயில் 15.69 மில்லிகிராம் ஆல்பா டோகோபெரல், 15.91 மில்லிகிராம் காமா டோகோபெரல் உள்ளது. வைட்டமின் இ, லிப்பிடுகளில் கரையும் நோய் எதிர்ப்பு பொருளாகும். செல் சவ்வுகள் வளர்ச்சி அடையவும்,ஆக்சிஜன்பிரீ-ரேடிக்கல்களிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பதிலும் இது பங்கெடுக்கிறது. பயன்பாடுகள்:

* ஆசிய நாடுகளில் சமையல் எண்ணெயாக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

* 450 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையில்தான் கடலை எண் ணெய் கொதிக்கும் என்பதால் பண்டங்கள் சமைக்க ஏற்றது கடலை எண்ணெய். வறுத்தெடுக்கும் உணவுகள் செய்ய கடலை எண்ணெய் சிறந்தது.

* நீண்டகாலம் கெட்டுப் போகாத தன்மை கொண்டது என்பதால் பல நாட்களுக்கு வைத்திருந்து பயன்படுத்தலாம்.ஆனால் சிலருக்கு வாந்தி போன்ற ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால் மருத்துவரின் ஆலோசனைக்குப் பின் பயன்படுத்தலாம்.

* சாதாரணமாக நல்ல மஞ்சள் நிறம் கொண்ட இந்த எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டபின் இளமஞ்சள் நிறமாக காணப்படும். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படுவதை தடுக்கும். மாசுப் பொருட்களும் நீக்கப்பட்டு இருக்கும். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை அனைவரும் பயன்படுத்தலாம்