Showing posts with label விலங்குகளும் அவைகளின் சற்குருவும் - ஸ்ரீ வாத்தியார் அருளியது. Show all posts
Showing posts with label விலங்குகளும் அவைகளின் சற்குருவும் - ஸ்ரீ வாத்தியார் அருளியது. Show all posts

விலங்குகளும் அவைகளின் சற்குருவும் - ஸ்ரீ வாத்தியார் அருளியது

விலங்குகளும் அவைகளின் சற்குருவும் -  ஸ்ரீ வாத்தியார் அருளியது


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


பாம்பு - ஸ்ரீ அஸ்தீக சித்தர்,
"அஸ்தீகா அபயம் அபயம்" என்று சொல்ல பாம்புகளினால் வரும் ஆபத்து நீங்கும்.

எறும்பு - ஸ்ரீ பிப்பலாத மகரிஷி,
ஸ்ரீ யாழ் அமராந்தகர் என்னும் (காரணப்) பெயரை உடைய மகரிஷி திருஅண்ணாமலையில் நிலம்புரண்டி என்னும் பெயர் கொண்ட அதியற்புத மூலிகை செடியின் நிழலில் எறும்புகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.

பல்லி - ஸ்ரீ சுத்தோதக மகரிஷி (வந்தவாசி)

கிளி - ஸ்ரீ சுக பிரம்மரிஷி

கழுதை - ஸ்ரீ ருத்ர பல்குனி சித்தர் (பூவாளூர்)

மீன் - ஸ்ரீ கோடி பஞ்சாட்சர சித்தர் (மீன்சுருட்டி)

புலி - ஸ்ரீ வியாக்ரபாத மகரிஷி (சிதம்பரம்)

கரடி - ஸ்ரீ கரடி சித்தர் (திருவாசி)

சுவாலினன் (எருமை மாடு) - ஸ்ரீ காரடையான் கரட்டை என்னும் தெய்வ தேவதை

சுவானன் (நாய்) - ஸ்ரீ பைரவ மகரிஷி, சித்தர் (பூந்தமல்லி)

காகம் - ஸ்ரீ வைகாசி பூரண மகரிஷி (தில்லையாடி), ஸ்ரீ சனி பரணி சித்தர்

வண்டு - ஸ்ரீ பிருங்கி மகரிஷி

மின்மினி பூச்சி - ஸ்ரீ திரிநாம கண்ட மகரிஷி (கருப்பத்தூர்)

அணில் - ஸ்ரீ அணில் அப்புக்குட்டி சித்தர்.

நமது அன்றாட வாழ்க்கை நலமாய் அமைய மனிதர்கள் மட்டும் அல்லாது பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என அனைத்து உயிர்களுமே நமது நலனுக்காகப் பாடுபடுகின்றன. எனவே, நாம் சிற்றுயிர்கள் அனைத்தையுமே வழிபட வேண்டும். அப்போதுதான் நமது வாழ்க்கை பூரணத்துவம் பெறும். சிற்றுயிர்களை வழிபடுவதால் ஏற்படும் உங்களுக்குத் தெரிந்த, தெரியாத பலன்களை இங்கே அளித்துள்ளோம்.

திருக்கோயிலில் உள்ள எறும்புகளுக்கு உணவிடுவதால் கடன் தொல்லைகள் தீரும். திருச்சி திருநெடுங்களம் திருக்கோயிலில் இயற்றப்படும் இத்தகைய வழிபாடு ஒருவருக்கு வர வேண்டிய நியாயமான சொத்தைத் திரும்ப பெற்றுத் தரும்.

நாய்களுக்கு ரொட்டி, பிஸ்கட், கடலை மிட்டாய் போன்றவற்றை உணவாக வழங்குவதால் கால தோஷங்களிலிருந்து நிவாரணம் கிட்டும். நன்றி மறவா நன்னிலையை அடைவோம்.

கழுதைகளுக்கு காரட், பச்சை பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை உணவாக வழங்கி வந்தால் நியாயமான வழியில் செல்வம் பெருகும். கடுமையான தோல் வியாதிகளின் வேகம் குறையும்.

உண்மையைப் பேசு, நல்லதைச் செய் என்று எல்லோரும் எவ்விடத்திலும் சொல்லி வருகிறோம். ஆனால், இதை நடைமுறையில் செயல்படுத்துவது லட்சம், கோடியில் ஒருவரே. உண்மையைப் பேசி வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் ஹரிச்சந்திர மகாராஜா. அண்மைக் காலத்தில் நம் மனம் கவர்ந்தவர் அண்ணால் காந்தியடிகள். இவ்வாறு நன்றாகத் தெரிந்த ஒரு நல்ல விஷயத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள உதவுவதே கரடி வழிபாடாகும். குருவை, பெரியோரை, மகான்களை, இறைவனை, நல்ல கொள்கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள விரும்புவோர் திருவாசி திருத்தலத்தில் இயன்றபோதெல்லாம் சிறப்பாக வியாழன் தோறும் வழிபட்டு வந்தால் அத்தலத்தில் தினமும் அரூபமாக வழிபடும் கரடி சித்தர் அருள்புரிவார்.

பல்லிகளுக்கு தலைமை குருவாக இருப்பவர் சுத்தோதக மகரிஷி. இவர் உறையும் வந்தவாசி திருத்தலத்தில் இறைவனை வழிபட்டு வந்தால் வீடுகளில் உலவும் நற்சக்திகளை செய்வினை, ஏவல்கள் மூலம் கட்டி வைத்திருந்தால் அத்தகைய குறைபாடுகள் நீங்கும். வாசிக் கலையில் தேர்ச்சி கிட்டும்.

முதலைகளுக்கு உணவிட்டு வந்தால் நல்ல மழைப் பொழிவு ஏற்படும்.

பசு மாடுகளுக்கு கோதுமை தவிடு, அரிசி கழுநீர், கீரை வகைகளை அளித்து வந்தால் சந்ததிகள் பெருகும்.

எருமை மாடுகளுக்கு மக நட்சத்திரத்தன்று கீரை அளித்து வந்தால் எம பயம் அகலும்.

குரங்குகளுக்கு வேர்க்கடலையை உணவாக அளித்து வந்தால் குருவின் மேல் கொண்டுள்ள நம்பிக்கை வளரும்.

மயில்களுக்குத் தான்ய உணவுகளை வழங்கி வந்தால் காமக் குற்றங்களிலிருந்து விடுபடலாம்.

மைனாக்களுக்கு நெல் மணிகளை அளித்து வந்தால் குடும்பத்தில் தம்பதிகளுக்கிடையே ஏற்படும் மன வேற்றுமை அகலும்.

அணில்களுக்கு துவாதசி அன்று வாதாங் கொட்டை, முந்திரிப் பருப்பு அளித்து வந்தால் முறையான காதல் வெற்றி பெறும்.
பச்சைக் கிளிகளுக்கு கொவ்வைப் பழங்களை அளித்து வந்தால் தேவதைகள், தெய்வங்களின் தரிசனம் கிட்டும்.

கருடன், பருந்துகளுக்கு உணவிட்டு வந்தால் இறுதிக் காலத்தில் பாயில் கிடந்து நோயில் வாடும் நிலை ஏற்படாது.

பாம்புப் புற்றுகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு வணங்கி பால் வார்த்து வந்தால் திருமண தோஷங்களுக்கு பரிகார முறைகள் கிட்டும்.

யானைகளுக்கு கேழ்வரகு களி, கரும்பு, வாழைப் பழம் போன்ற உணவுகளை குறைந்தது இரண்டு டன் அளித்து வழிபடுதலால் சிறப்பான புத்திக் கூர்மை ஏற்படும்.

புறாக்களுக்கு கோதுமை, கம்பு போன்ற தானியங்களை அளித்து வந்தால் அயல் நாடுகளில் வசிக்கும் நமது உறவினர் நலம் பெறுவர்.

ஆஸ்திரேலிய கடலோரப் பகுதிகளில் காணப்படும் பெலிகன் பறவைகளுக்கு மீன்களை ஊட்டி விடுவதால் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இவர்களை இழந்ததால் ஏற்படும் துக்கத்திற்கு ஓரளவிற்கு மன ஆறுதல் கிட்டும். கிளி, நாய்களைப் போல மனிதர்களிடம் அன்புடன் பழகும் பறவை இனமே பெலிகன் பறவையாகும்.

வெண்ணிற குதிரைகளுக்கு அவித்த கொள் அளித்து வந்தால் குழந்தைகள் படிப்பில் முன்னேறுவர். மந்த புத்தி அகலும்.